இயற்பியலின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும்.அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இயற்பியல் முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இயற்பியல் குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
இயற்பியல்
- விசை, நிலைமம், இயக்கம் பற்றி விளக்கியவர்? கலிலியோ.
- இயற்கையில் உள்ள பொருள்கள் யாவும் ஒய்வுநிலையிலோ அல்லது சீரான இயக்க நிலையிலோ தொடர்ந்து இருக்கும்? கலிலியோ.
- புறவிசை ஏதும் செயல்படாத வரை பொருள்கள் முத்தைய நிலையிலேயே இருக்கும்? கலிலியோ.
- பொருளின் மீது விசையின் தாக்கம் இருக்குப்போது, பொருள் தம் “நிலைமாற்றத்தினை தவிர்க்க முயலும் தன்மை அதன்? நிலைமம் எனப்படும்.
- வெற்றிடத்தில் வெவ்வேறு நிறை கொண்ட பொருள்கள் யாவும் ஒரே உயரத்தில் இருந்து விழும் போது, அவை ஒரே நேரத்தில் தரையை வந்தடையும்? கலிலியோ.
- நிலைமைம் யாரைச் சார்ந்து உள்ளது? நிறை.
- பேருந்தில் பயணம் செய்யும் போது, பேருந்து திடீரென நிறுத்தப்படும் போது, தமது உடல் எப்படி சாபும்? முன்னோக்கி.
- ஓய்வு நிலையில் உள்ள பேருந்து, திடீரென நகரும் போது, நமது உடல் எப்படி சாயும்?பின்னேக்கி சாய்கின்றோம்.
- சமன் செய்யப்படாத புற விசை எதும் செயல்படாத வரையில், பொருள் ஓய்வு நிலையை மாற்றுவதை எதிர்க்கும் தன்மை? ‘நிலைமம்‘ என்றழைக்கப்படுகிறது.
- தண்ணீர் குவளைமீது வைப்பட்ட காகித அட்டை மீது நாணயம் வைக்கப்பட்டுள்ளது. அட்டையை வேமாக நகர்த்தினால், நாணயம் அங்கேயே விழும். காரணம்? நாணயத்தின் ஓய்வின் நிலைமம்.
- நிலைமத்தின் வகைகள்? 3.
- நிலையாக உள் ஒவ்வொரு பொருனும் தாது ஓய்வு நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு?ஓய்வில் நிலைமம்.
- இயக்க நிலையில் உள்ள பொருள், தமது இயக்க நிலையில் மாற்றத்தை எதிர்க்கும் பண்பு? இயக்கத்தில் நிலைமம்.
- இயக்க நிலையில் உள்ள பொருள், இயங்கும் திசையில் இருந்து மாறாது, திசை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு? திசையில் நிலைமம்.
- நீளம் தாண்டும் வீரர், நீண்ட தூரம் தாண்டுவதற்காக, சிறிது தூரம் ஏன் ஓடுகிறார்? இயக்கத்திற்கான நிலைமம்.
- ஓடும் மகிழுந்து வளைபாதையில் செல்லும் போது பயணியர், ஒரு பக்கமாக சாயக் காரணம்?திசைக்கான நிலைமம்.
- கிளைகளை உலுக்கிய பின் மரத்திலிருந்து கீழே விழும் இலைகள்? ஓய்விற்கான நிலைமம்.
- பழுத்தபின் விழும் பழங்கள்? ஓய்விற்கான நிலைமம்.
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website Adda247 | Click here |