இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்திய அரசு அமைப்பு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
TNPSC Group 4 Test Series 2023
இந்திய அரசு அமைப்பு
- இந்தியாவில் பாலின சம உரிமை பெற தடை கல்லாய் இருப்பது? செயலின பாகுபாடு
- இந்தியாவில் மனித உரிமை நீதிமன்றமாக அறிவிக்கை செய்யப்பட்டவை? மாவட்ட அமர்வு நீதிமன்றம்
- சட்ட விதி மீறலில் ஈடுபட்ட சிறாரை விசாரணைக்கு உட்படுத்தப்படும் ஆயம்? சிறார் நீதி குழுமம்
- நன்னடத்தையில் விடுவிக்கப்பட்ட குற்றவாளியின் நடத்தை நெறி காலம்? மூன்றாண்டு
- 1989, குழந்தைகள் உரிமைகள் மரபுவழி முறை எப்போது நடைமுறைக்கு வந்தது? 1990
- NJAC என்பது? தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்
- எந்த குழநிலையில் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்க மறுக்க இயலாது? முகாந்திரம் ஏதும் இல்லா வழக்கு என எண்ணும் போது
- பாதிக்கப்பட்டோர் தொடர்புடைய நீதிமுறை மாற்றத்திற்கு முக்கிய காரணியாக விளங்குவது? பாதிக்கப்பட்டோரின் எதிர்செயல்
- மூன்றாம் தலைமுறையினரின் உரிமையாக கருதப்படுவது எது? கூட்டுரிமை
- தெளிவான மனித உரிமை மீறலானது? கற்பழிப்பு
- மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்கு களுக்கு தகுந்த தீர்வு என்பது? நீதி பேராணை மனுவின் மூலம் நிவாரணம் பெறுதல்
- இயலாமை உள்ள நபர் (சமவாய்ப்பு, உரிமை பாதுகாப்பு மற்றும் முழு பங்களிப்பு) சட்டம் எந்த ஆண்டு இந்தியாவில் கொண்டுவரப்பட்டது? 1995
- ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்ட வருடம்? 1995
- குழந்தைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதை ஒழிக்க, உச்சநீதி மன்றம், எந்த வழக்கின் தீர்பான் மூலம் வழிகாட்டியது? விசால் ஜீத் எதிர் மத்திய அரசு
- பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் எத்தனை மணி நேரத்திற்குள் மருத்துவ பரி சோதனைக்கு அனுப்பப்பட வேண்டும்? சம்பவம் நடந்ததிலிருந்து 24 மணி நேரத்திற்குள்
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |