இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்திய அரசு அமைப்பு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
இந்திய அரசு அமைப்பு
- இந்திய அரசியல் சட்ட விதி 41 கூறுவது? வேலைக்கு உரிமை
- குடியரசுத் துணைத் தலைவர் பதவி பற்றி எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது? 63 சட்டப்பிரிவு
- கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கும் சட்டத் திருத்தம் எது? 73வது மற்றும் 74வது சட்டத் திருத்தம்
- இந்திய அரசியலமைப்பில் அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ள விதிகள்? விதி 36 முதல் 51
- இந்திய அரசியலமைப்பில் எத்தனை உறுப்பினர்கள் கையெழுத்திட்டார்கள்? 284 உறுப்பினர்கள்
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ளது? 22 மொழிகள்
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எப்பகுதி அடிப்படை உரிமைகளை உள்ளடக்கியது? பகுதி III
- இந்தியாவில் அரசியல் அதிகாரத்தின் பிரதானமூலம் எது? மக்கள்
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளிப்பது? ஒற்றைக்குடியுரிமை
- இந்திய பாராளுமன்ற உள்ளடக்கம்? குடியரசுத்தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை
- பாராளுமன்ற இருகூட்டத் தொடர்களுக்கிடையே அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச இடைவெளி காலம் என்ன? ஆறு மாதங்கள்
- இந்தியாவில் முப்படைகளின் தளபதி யார்? குடியரசுத் தலைவர்
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்? Dr.B.R.அம்பேத்கார்
- இந்திய குடியரசுத் தலைவர் எந்த தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்?மறைமுகத் தேர்தல்
- இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்? 26 நவம்பர் 1949
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |