தமிழ் மொழியின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ் மொழி தேர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB மற்றும் TN TRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், தமிழ் மொழி குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
தமிழ் மொழி
- இராசராச சோழனது மெய்க்கீர்த்திகள் எத்தனை ? 2
- இராசராச சோழனின் இரண்டாவது மெய்க்கீர்த்தியில் இடம்பெற்றுள்ள வரிகள் ? 91
- இராசராச சோழன் பெற்ற பட்டங்கள் ? கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி.
- மெய்க்கீர்த்தி யார் காலத்தில் வடிவம் பெற்றது? சோழர் காலம் (முதலாம் இராசராசன்)
- தஞ்சை பெரிய கோயிலுள்ள இராசராசன் காலத் தமிழ்க் கல்வெட்டு எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது? 11ம் நூற்றாண்டு.
- சிலப்பதிகாரம் குறிப்பிடும் இசைகள் எத்தனை? ஏழு இசைகள்
- கோவலனையும் கண்ணகியையும் மதுரைக்கு அழைத்து சென்றவர்? கவுந்தியடிகள்.
- திருமால்குன்றம் என்பது ? அழகர் மலை.
- நெடுவேள் குன்றம் என்பது ? சுருளி மலை.
- மதுரையில் கணவனை இழந்த கண்ணகி எந்த இடத்தை அடைந்தாள்? வேங்கை கானல் (சுருளி மலை).
- உரைப்பாட்டு மடை (உரைநடை பாங்கில்) என்பது எதில் வரும் தமிழ் நடை? சிலப்பதிகாரம்.
- சிலப்பதிகாரம் இயற்றியவர் ? இளங்கோவடிகள்.
- இளங்கோவடிகள் எந்த மரபு ? சேர மரபு.
- மூவேந்தர் பற்றிய செய்திகளை குறிப்பிடும் நூல் ? சிலப்பதிகாரம்.
- சிலப்பதிகாரத்தின் சிறப்பு பெயர் ? முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
- சிலப்பதிகார காண்டங்களின் எண்ணிக்கை ? 3. (புகார் காண்டம், மதுரை காண்டம், வஞ்சி காண்டம்.)
- சிலப்பதிகார காதைகளின் எண்ணிக்கை ? 30.
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |