தமிழ் மொழியின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ் மொழி தேர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB மற்றும் TN TRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், தமிழ் மொழி குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
தமிழ் மொழி
- கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் மர ஆணிகள்_____ என அழைக்கப்படும்? தொகுதி
- “சல்லி” என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற_____ குறிக்கும். வளையத்தினைக்
- ‘தேடிய செல்வத்தைச் செலவழிக்காமல் புதைத்து வைப்பது மடமை’- என்று கூறியவர் யார்? ஒளவையார்
- “எந்தமிழ்நா” பிரித்து எழுதவும்? எம் + தமிழ் + நா.
- ‘காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’ நிலத்துக்கு நல்ல உரங்கள் – இத்தொடரில் அடிக்கோட்ட பகுதி குறிப்பிடுவது? சருகும் சண்டும்
- வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றின் பயிர் வகை? மணி வகை.
- கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ – தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயர் + வினையாலணையும் பெயர் எழுது? பாடல் + கேட்டவர்.
- ‘மெத்த வணிகலன்’ என்பது? வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்.
- “உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்” பாரதியின் வரிகளில் உள்ள நயங்கள்? மோனை, எதுகை
- “பாடு இமிழ் பனிக்கடல் பருகி’ என்னும் முல்லைப்பாட்டு அடியில் உள்ள அறிவியல் செய்தி என்ன? கடல் நீர் ஆவியாகி மேகமாகிறது.
- “பெரிய மீசை சிரித்தார்” – சொல்லில் உள்ள தொகையின் வகை எது? அன்மொழித்தொகை
- ” காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்” எது? “காசிக் காண்டம்”.
- சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” _ அடியில் பாக்கம் பொருள்? சிற்றூர்.
- விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே படைத்த புலவர்? திருவள்ளுவர்
- அமெரிக்காவின் மினசோட்டோ தமிழ்ச் சங்கம் _______ விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது? வாழையிலை விருந்து விழா
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |