இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்திய அரசு அமைப்பு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
இந்திய அரசு அமைப்பு
- நீதிப் புனராய்வு எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டது? அமெரிக்கா
- தெலங்கானா இந்தியாவின் 29வது மாநிலமாக உருவான ஆண்டு? 2014
- பஞ்சாயத் ராஜ்யத்தை முதலில் நடைமுறைப் படுத்திய மாநிலம் எது? ராஜஸ்தான்
- _______ என அறியப்படும் 74வது சட்டதிருத்தம் மூன்று வகையான நகராட்சி அமையப் பெறுவதற்கு வகை செய்கிறது. நகர்பாலிக் சட்டம்
- இந்திய அரசியல் சட்ட விதி 41 கூறுவது? வேலைக்கு உரிமை
- குடியரசுத் துணைத் தலைவர் பதவி பற்றி எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது? 63 சட்டப்பிரிவு
- கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கும் சட்டத் திருத்தம் எது? 73வது மற்றும் 74வது சட்டத் திருத்தம்
- இந்திய அரசியலமைப்பில் அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ள விதிகள்? விதி 36 முதல் 51
- இந்திய அரசியலமைப்பில் எத்தனை உறுப்பினர்கள் கையெழுத்திட்டார்கள்? 284 உறுப்பினர்கள்
- இந்திய _______ கட்சி முறையை பெற்றுள்ளது? பல கட்சி முறை
- மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உருவாக்கப்பட்ட ஆண்டு? 1980
- உள்ளாட்சி அரசாங்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்? ரிப்பன் பிரபு
- வரதட்சணைத் தடைச் சட்டம் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஆண்டு? 1961
- நேரடி மக்களாட்சி நடைபெறும் நாடு எது? சுவிட்சர்லாந்து
- எம்முறை அரசாங்கத்தில் தலைவர் சட்ட மன்றத்திற்கு பொறுப்புடையவராக இருக்க மாட்டார்? தலைவர் முறை
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |