Tamil govt jobs   »   Latest Post   »   Adda's One Liner Important Questions on...

Adda’s One Liner Important Questions on TNUSRB & TNPSC

இயற்பியலின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இயற்பியல் முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இயற்பியல் குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.

TNUSRB SI Test Series 2023

TNPSC Group 4 Test Series 2023

TNUSRB POLICE CONSTABLE 2023

இயற்பியல்

  • நீரில் மூழ்கியிருக்கும் காற்றுக்குமிழி மேலே எழும்பும் போது, அதன் அளவு ______?  அதிகரிக்கும்
  • வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்கு, அவற்றின் குறைந்த ______ காரணமாகும்.  அடர்த்தி
  • அழுத்த சமையற்கலனில் (pressure cooker) உணவு விரைவாக சமைக்கப்படுவதற்கு காரணம்? அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.
  • ஆழம் அதிகரிக்கும் போது ______ அதிகரிக்கின்றது? அழுத்தம் 
  • பொருளானது திரவத்தில் மூழ்கி இருக்கும்போது உணரப்படும் எடையானது அதன் உண்மையான எடையை விட ______ ஆகத் தோன்றும். குறைவானதாக
  •  வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி ______ ஆகும். காற்றழுத்தமானி
  • பழரசம் அருந்தப் பயன்படும் உறிஞ்சு குழல் ______ மூலம் வேலை செய்கிறது? வளிமண்டல அழுத்தத்தின்
  • ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் காற்றில் மிதப்பதற்கு காரணம்? ஹீலியம் வாயுவின் நிறை காற்றின் நிறையை விட குறைவு.
  • அழுத்தத்தின் அலகு?  பாஸ்கல்
  • பாகுநிலையின் அலகு? பாய்ஸ்
  • ______ விதியை அடிப்படையாகக் கொண்டு நீரியல் உயர்த்தி செயல்படுகிறது? பாஸ்கல்
  • திரவ அழுத்தத்தை அளவிட உதவும் இரு கருவிகளின் பெயர்கள்? மானோ மீட்டர், பாரோ மீட்டர்
  • ஒரு பொருள் இயங்கும் திசைக்கு எதிரான திசையில் விசையைச் செலுத்தினால் அப்பொருளின் இயக்கமானது ? நின்று விடும்
  • கடல் நீர் மட்டத்தில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு? 76 செ.மீ பாதரசத் தம்பம்
  • தாவரங்களில் நீர் மேலேறுவதற்குக் காரணம் ______ என்ற திரவப் பண்பே ஆகும். நுண்புழையேற்றம்

**************************************************************************

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil