Tamil govt jobs   »   Study Materials   »   ஆரம்ப பொது விடுப்புகள் | Initial Public...

ஆரம்ப பொது விடுப்புகள் | Initial Public Offering​ (IPO) for TNPSC

ஆரம்ப பொது விடுப்புகள், “பொது விடுப்புகள்” என்றும் “மிதவை” என்றும் அறியப்படுவது, ஒரு நிறுவனம் தனது பொது பங்குபத்திரம் மற்றும் பங்குகளை முதல் முறையாக வெளியிடுவதை குறிப்பதாகும். ஆரம்ப பொது விடுப்புகள் பொதுவாக சிறிய, இளம் நிறுவனங்கள் தமது நிறுவனத்தை விரிவாக்கும் பொருட்டு அதற்கான முதலீட்டை ஈட்டுவதற்கும், பெருக்குவதற்கும் ஏற்பாடு செய்யும் முறையாகும், ஆனால் பெரிய தனியார் நிறுவனங்களும் இது போன்று பொது வர்த்தகம் செய்வதற்கு முனையலாம். ஆரம்ப பொது விடுப்புகள், அதன் வரலாறு, வகைகள், அது வெளியிடப்படும் நேரம், அதற்கான செயல்முறை மற்றும் அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

ஆரம்ப பொது விடுப்புகள் (IPO) ஒரு கண்ணோட்டம்

Initial Public Offering​ (IPO)
Initial Public Offering​ (IPO)

ஆரம்ப பொது விடுப்புகள் என்பது ஒரு நிறுவனம் தனது நிறுவனத்தின் பங்குகளை பங்குச்சந்தையில் பட்டியலிட்டு, விற்பனை செய்ய முன் வரும், ஒரு நடவடிக்கையாகும். இதனால், அந்த குறிப்பிட்ட நிறுவனம், ஒரு பொது நிறுவனமாக மாறுகிறது. அவர்கள் புதிய பங்கு வெளியீட்டை கொண்டு வந்த உடன் அந்த நிறுவனம் இந்திய பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை பரிவர்த்தனை வாரியம் நிர்ணயித்த வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டிய நிலை உருவாகும். இவ்வாறு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு, புதிய பங்கு வெளியீட்டின் மூலம் முதலீடு திரட்ட விண்ணப்பித்து, அதற்கு அனுமதி வழங்கப்படும் போது, பங்குச்சந்தையில் இருந்து அந்த நிறுவனம் நிதியினை திரட்ட முடியும்.

ஒரு நிறுவனம், ஆரம்ப பொது விடுப்பின் மூலமாக, முதலீட்டாளர்களிடம் இருந்து பெருமளவில் பணத்தை ஈட்டி, அதை வரும் காலத்திற்கான விரிவாக்க அல்லது வளர்ச்சித் தேவைகளுக்கு பயன்படுத்துகிறது. நிறுவனத்திற்கு இந்த மூலதனத்தை திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை, ஆனால் வரும் காலங்களில் ஈட்டும் இலாபத்தை அனைத்து முதலீட்டாளர்களுடன் பங்கிட வேண்டும், மேலும் நிறுவனம் செயலிழந்து விட்டால், அப்பொழுது அதை விற்பதால் கிடைக்கும் தொகையினையும் சரியான முறையில் பங்கிட வேண்டும்.

மேலும், பங்குச் சந்தையில் ஒரு நிறுவனம் பதிவாகி விட்ட பிறகு, தேவைப்பட்டால், உரிமைகள் வழங்குதல் மூலமாக முதலீட்டாளர்களிடம் இருந்தே மேலும் நிதி திரட்ட வழி இருப்பதால், கடன் இல்லாமலேயே தனது தேவைகளை அவ்வப்போது நிறைவெற்றிக்கொள்ளலாம். தனிப்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து ஒவ்வொரு முறையும் நிதி திரட்ட வேண்டிய அவசியம் இல்லாமல், வேண்டிய பொழுது நேராக பொது மக்களான முதலீட்டாளர்களிடம் இருந்தே, நிதி திரட்டுவதற்கு இப்படி ஒரு அமைப்பு இருப்பதால், இதையே நிறுவனங்கள் விரும்புகின்றனர் மேலும் பங்குச் சந்தையில் பதிவு செய்து கொள்வதற்கு இதுவே மூல காரணமாகும்.

Also Read: Education System in Tamil Nadu | தமிழ்நாட்டில் கல்வி முறை – Part 2

ஆரம்ப பொது விடுப்புகளின் வரலாறு

History of IPO
History of IPO

பொதுப் பங்குகளை வர்த்தகத்தில் ஈடுபடுத்தும் நிறுவனத்தின் ஆரம்ப வடிவத்தை, ரோமானியக் குடியரசின் பப்ளிகனி (PUBLICANI) இன் மூலம் அறியலாம். நவீன பங்கு நிறுவனங்களைப் போலவே, பப்ளிகனியும் பங்குகளை வைத்திருக்கும் நவீன நிதி நிறுவனங்களின் சட்டப்பூர்வ அமைப்புகளுக்கு ஒத்ததாக இருந்தது.

IPO க்களுக்கு அதன் தற்போதைய வடிவங்களை வழங்கிய நவீன நிதி அமைப்பின் முன்னோடியாக டச்சுக்காரர்கள் பாராட்டப்படுகிறார்கள். IPO இன் முதல் அறியப்பட்ட பதிவு நிகழ்வு மார்ச் 1602 இல் டச்சு கிழக்கிந்திய நிறுவனம், புதிய நிதி திரட்டுவதற்காக அதன் பங்குகளை வழங்கியபோது நடந்தது.

எனவே டச்சு கிழக்கிந்திய நிறுவனம், பொது மக்களுக்கு பத்திரங்கள் மற்றும் பங்குகளை வழங்கும் முதல் நிறுவனமாக மாறியது, மேலும் அதிகாரப்பூர்வ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் பொது வர்த்தக நிறுவனமாக மாறியது.

Also Read: Education System in Tamil Nadu | தமிழ்நாட்டில் கல்வி முறை – Part 1

ஆரம்ப பொது விடுப்புகளின் வகைகள்

Types of IPO
Types of IPO

ஆரம்ப பொது விடுப்புக்களை நாம் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

  1. முதல் வகை, நிறுவனம் புதிய பங்குகளை பொது மக்களுக்கு வெளியிட்டு மூலதனம் திரட்டுவது. இது புதிய பங்கு வெளியீடு (Fresh Issue) ஆகும். இம்முறையில், பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்ட பணம் நிறுவனத்துக்குச் செல்கிறது. நிறுவனத்தின் மொத்த செலுத்தப்பட்ட மூலதனம் அதிகரிக்கும். தற்போதுள்ள பங்குதாரர்கள் வைத்திருக்கும் பங்குகளின் எண்ணிக்கை மாறாமல் இருக்கும். ஆனால், மொத்த மூலதனத்தில் அவர்களின் சதவீதம் குறையும்.
  2. இரண்டாம் வகையில், தற்போதுள்ள பங்குதாரர்கள் தங்கள் பங்குகளின் ஒரு பகுதியையோ, முழுமையாகவோ விற்க விரும்புவார்கள். இது கையிருப்பு பங்கு விற்பனை (Offer For Sale) அல்லது ஓஃப்ஸ் (OFS) என்பதாகும். இதில் நிறுவனத்தின் மொத்த மூலதனம் மாறாமல் இருக்கும்; ஆனால் தற்போதுள்ள பங்குதாரர்களின் சதவீதம் குறையும்.
  3. மூன்றாம் வகையானது, கலப்பு வெளியீடு (Hybrid Offer). இதில் புதிய பங்கு வெளியீடும், கையிருப்பு பங்கு விற்பனையும் கலந்து இருக்கும். இம்முறையில், நிறுவனத்தின் மொத்த மூலதனம் புதிய பங்கு வெளியீடு காரணமாக அதிகரிக்கும். தற்போதுள்ள பங்குதாரர்கள் வைத்திருக்கும் பங்குகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் சதவீதம் குறையும்.

Download Now : Weekly Current Affairs in Tamil 3rd Week of November 2021 

ஆரம்ப பொது விடுப்புக்கான அடிப்படை தேவைகள்

Basic requirements for an IPO
Basic requirements for an IPO
  • புதிய பங்கு வெளியீட்டு நடைமுறையை செயல்படுத்த, அடிப்படை தேவைகள் என்று சில விஷயங்கள் பின்பற்றப்பட வேண்டும்.
  • புதிதாக பங்கு வெளியிடும் நிறுவனம், ஒரு முதலீட்டு வங்கியை நியமிக்க வேண்டும். அந்த முதலீட்டு வங்கி, அந்த நிறுவனத்தின் சாதக பாதகங்களை ஆராய்ந்து அதற்கான அறிக்கையை தயார் செய்யும்.
  • மேலும், பங்குச்சந்தைக்கு வரும் அந்த நிறுவனத்தின் பங்கு, எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் முடிவு செய்யப்படும்.
  • பங்குகளை வெளியிடும் நிறுவனமும், முதலீட்டு வங்கியும் சேர்ந்து, நிதி விவரங்களை ஒரு அறிக்கையாக தயார் செய்து, இந்திய பங்குச்சந்தை வழிகாட்டு ஆணையமான SEBI யிடம் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
  • அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் ஆராயப்பட்டு, இந்த நிறுவனம் பங்குச்சந்தையில் நிதியை திரட்ட தகுதி உடையதா என்பதை, பங்குச்சந்தை வழிகாட்டு ஆணையம் முடிவு செய்யும்.
  • தகுதி உள்ள நிறுவனம் என்று முடிவு செய்யப்படும் பட்சத்தில், பங்குகளை பெற முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்படும். பின்னர் பங்குகளை சந்தையில் பட்டியலிட, ஒரு குறிப்பிட்ட தேதியை பங்குச்சந்தை வழிகாட்டு ஆணையம் வழங்கும்.
  • சில நிறுவனங்கள் புதிய பங்குகளை வெளியிடும் போது அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்காது, அதனால், சில நிறுவனங்கள், குறிப்பிட்ட சில காலம் காத்திருந்து மீண்டும் ஒரு முறை புதிய பங்கு விற்பனை வெளியீட்டை அறிவிக்கும்.
  • அந்த குறிப்பிட்ட கால இடைவெளியில், அந்த நிறுவனம் முதலீட்டாளர்களை தேடிப்பிடிக்கும் அல்லது தங்களுடைய நிறுவனம் குறித்த சாதகமான சூழ்நிலையை உருவாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

ஆரம்ப பொது விடுப்புக்கான வெளியீட்டு நேரம்

‘எப்போது பங்கு வெளியிட வேண்டும் என்பதை நிறுவனம் முடிவு செய்யும். அது முதலீட்டாளருக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை’ என்று புதிய பங்கு வெளியீட்டை பற்றி வாரன் பஃபெட் கூறியுள்ளார்.

பங்குகளை பொது மக்களுக்கு வெளியிட முடிவு செய்த நிறுவனம், சரியான நேரத்துக்குக் காத்திருக்கும். பங்கு வெளியீட்டுக்கு அதிகபட்ச விலை கிடைக்கும் சூழ்நிலை இருந்தால்தான் பங்குகளை வெளியிட முன்வரும். அதனால்தான் பெரும்பாலான IPO க்கள் பங்குச் சந்தை உச்சநிலையில் இருக்கும்போது வெளி வருகின்றன.

Also Read: E-governance Part II | மின் ஆளுகை பகுதி II

ஆரம்ப பொது விடுப்புகளின் செயல்பாடு

Working of IPO
Working of IPO
  • ஒரு IPO விற்கு முன், ஒரு நிறுவனம் பங்குச் சந்தையில் வர்த்தகத்திற்கு உட்படாத ஒரு தனியார் நிறுவனமாகும். தனியார் நிறுவனம், முதலில் அதன் நிறுவனர்கள், குடும்பத்தார்கள் மற்றும் சில தொழில்முறை முதலீட்டாளர்கள் போன்ற குறைந்த எண்ணிக்கையிலான பங்குதாரர்களைக் கொண்டிருக்கும்.
  • நிறுவனம் அதன் வளர்ச்சியில் ஒரு கட்டத்தை அடையும் போது, ​​அது ஒரு நிதி ஆணையத்தின் (இந்தியாவில் SEBI) கடுமையான விதிமுறைகளை தாங்க முடியும் என்று நம்புகிறபொழுது, அது பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதையும், பொது நிறுவனமாக மாறுவதில், அதற்குள்ள ஆர்வத்தையும் விளம்பரப்படுத்தத் தொடங்கும்.
  • ஒரு IPO என்பது, உயர்ந்துகொண்டிருக்கும் நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான படியாகும், ஏனெனில் இது கூடுதல் நிதி திரட்டுவதற்கான நுழைவாயிலாகும். இது நிறுவனத்தை அதன் ஆரம்ப அமைப்பைத் தாண்டி வளர அனுமதிக்கிறது, மேலும் சிறந்த வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு வழிவகுக்கிறது, இது புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும், எதிர்காலத்தில் அதிக நிதியை கடன் வாங்க முற்படுவதற்கும் ஒரு காரணியாக இருக்கும்.
  • ஒரு நிறுவனம் பொது நிறுவனமாக பட்டியலிடப்படும் போது, ​​தனிப்பட்ட முறையில் இருந்த முந்தைய பங்குகள், பொதுவில் வர்த்தகம் செய்யப்படும் மற்றும் தற்போதுள்ள தனியார் பங்குதாரர்களின் பங்குகள், பொது பங்குகளுக்கு சமமாக இருக்கும்.

Also Read: Social Welfare Schemes of Government of Tamil Nadu PART 1 | தமிழக அரசின் சமூக நலத் திட்டங்கள் பகுதி 1

ஆரம்ப பொது விடுப்புகளின் நன்மைகள் மற்றும் தீமைகள்

Advantages and Disadvantages of IPO
Advantages and Disadvantages of IPO

நன்மைகள்

  • ஈக்விட்டி அடிப்படையை அதிகரிப்பது மற்றும் பல்வகைப்படுத்துவது.
  • மூலதனத்தை திரட்டுவதற்கான மலிவான வழிகள்.
  • அதிக வெளிப்பாடு, கௌரவம் மற்றும் மேம்பட்ட பொது பிம்பம்.
  • சிறந்த பணியாளர்களை ஈர்த்து பணியில் அமர்த்தும் திறன் மற்றும் அவர்களை பணப்புழக்க பங்கேற்பு மூலம் மேற்பார்வையிடும் நிர்வாகம்.
  • கையகப்படுத்துதல்களை செயல்படுத்துவது.
  • ஈக்விட்டி, மாற்றத்தக்க கடன் போன்றவற்றின் மூலம் பல நிதி வாய்ப்புகளை உருவாக்குதல்.

தீமைகள்

  • சந்தைப்படுத்தல் மற்றும் கணக்கியல் செலவுகள் அதிகரிக்கும்.
  • முக்கியமான நிதி மற்றும் வணிகத் தகவல்களை வெளியிடுவது அவசியமாகும்.
  • ஒரு ஆரம்ப பொது விடுப்பு சீராக நடைபெறுவதை உறுதிசெய்ய, நிர்வாகத்தின் அதிக முயற்சியும் கவனமும் தேவை.
  • நிறுவனம் சிறப்பாக செயல்படாத பட்சத்தில், கூடுதல் நிதி பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போகலாம்.
  • தகவல்களைப் பகிரங்கமாக வெளிப்படுத்துவது, போட்டியாளர்கள் அல்லது வாடிக்கையாளர்களால் கூட பயன்படுத்தப்படலாம்.
  • புதிய பங்குகளை வாங்கும் திறன் மூலம், புதிய பங்குதாரர்கள் வருவதால், ஆரம்பம் முதல் இருக்கும் பங்குதாரர்கள் சுதந்திரத்தை இழக்க நேரிடும்.
  • நிறுவனம் வழக்கு, தனியார் பத்திரங்கள் மற்றும் பிற வழித்தோன்றல் செயல்களின் அபாயத்திற்கு ஆளாக நேரிடும்.

Also Read: Best Study Materials For TNPSC | டிஎன்பிஎஸ்சிக்கான சிறந்த பாட புத்தகங்கள்

ஆரம்ப பொது விடுப்புகளின் முடிவுரை

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.  இக்கட்டுரை TRB, TNPSC GROUP 2 & 2A, GROUP 1, க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

Coupon code- NOV75-75% OFFER

TNPSC Group - 4 Batch Tamil Live Classes
TNPSC Group – 4 Batch Tamil Live Classes

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group