Tamil govt jobs   »   Study Materials   »   e-governance in Tamilnadu

TNPSC Group 2 Study materials| Unit 9: E-governance Part II | மின் ஆளுகை பகுதி II

ADDA247 தமிழின் இந்த பகுதியில் நாம் TNPSC குரூப் 1, 2/2A தேர்வுகளுக்கு தேவைப்படும் முதன்மை தேர்விற்கான கட்டுரைகளும் பிற RRB,SSC தேர்வுகளுக்கான கொள்குறி வினாக்களுக்கு தேவையான விஷயங்களும் பார்ப்போம்

E-governance in Tamil Nadu : overview (தமிழ்நாட்டின் மின்னாளுகை  பற்றிய ஒரு கண்ணோட்டம்):

மின்னணு நிர்வாகம், அரசாங்கத்திலிருந்து குடிமகனுக்கு, அரசாங்கத்திலிருந்து வணிக துறைக்கு, அரசுக்கு அரசு, தமிழகத்தில் மின் ஆளுமை பற்றி பகுதி I இல் தெரிந்துகொண்டோம். பகுதி II இல் எல்காட்(ELCOT) பற்றிய ஒரு சிறு குறிப்பை காணலாம்.

E-Governance in Tamil Nadu (தமிழகத்தில் மின்னாளுகை):

  • தமிழகத்தில் மின்னாளுகை தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இத்துறையின் அமைச்சர் டாக்டர். எம். மணிகண்டன்.
  • தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை  1998 – ல் உருவாக்கப்பட்டது.
  • தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் (ELCOT) மூலமாக தகவல் தொழில் நுட்பவியல் மேம்பாடு மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பொருள்கள், சேவைகள் கொள்முதல் மின்னாளுமை மற்றும் உலகத்தரம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றில் தகவல் தொழில் நுட்பவியல் துறை முன்னணி வகிக்கிறது.

[sso_enhancement_lead_form_manual title=” வெற்றி வாராந்திர நடப்பு நிகழ்வுகள் August 1st Week 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/08/09113631/Weekly-Current-Affairs-PDF-in-Tamil-August-1st-week-2021.pdf”]

E-Governance-Electronics Corporation of Tamil Nadu (தமிழ்நாடு மின்னனு நிறுவனம் , எல்காட்) :

எல்காட் நிறுவனம், நிறுவனங்கள் சட்டம் 1956 – இன் கீழ் 1977 – ல் மாநிலத்தில் மின்னணுத் துறையை மேம்படுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான, பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

Electronics Corporation of Tamil Nadu
Electronics Corporation of Tamil Nadu

தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கலுக்குப் பின் தொழில் துறையின் போக்கிற்கிணங்க மின்னணு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவைகளுக்கான (IT/ITES) பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கொள்முதல் முகமையாக, எல்காட் நிறுவனம் தன்னைப் படிப்படியாக மறு சீரமைப்பு செய்துகொண்டது.

தமிழ்நாடு மாநில பெரும்பரப்பு வலையமைப்பு (TNSWAN), தமிழ்நாடு மாநிலத் தரவு மையம் (TNSDC), தமிழ்நாடு பேரிடர் மீட்பு மையம் (TNDRC), மேகக்கணினி அமைப்பு (Cloud) முதலான தகவல் தொழில்நட்ப உட்கட்டமைப்புகளையும் எல்காட் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

E-Governance Vision (தொலைநோக்குப் பார்வை) :

தமிழ்நாட்டை மின்னணு மயமாக்கப்பட்ட மாநிலமாக உருவாக்குவதற்கு அரசுக்கு உதவிகரமாகத் திகழ்வதே எல்காட் நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையாகும்.

E-Governance Goal (குறிக்கோள்) :

  • மக்கள் மற்றும் தொழில்துறைக்கு, தமிழகத்தை ஒரு ஏற்ற மற்றும் சிறந்த மாநிலமாகவும் விரும்பத்தக்க இடமாகவும் அடையாளப்படுத்துதல்.
  • உலகமெங்கும் உள்ள தகவல் தொழில்நுட்ப முதலீட்டாளர்களிடையே, தமிழ்நாட்டை தகவல் தொழில்நுட்பத்திற்கு உகந்த இடமாக உயர்த்துதல்.
  • அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு, தகவல் தொழில்நுட்பப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விருப்ப விற்பனையாளராகத் திகழ்தல்.

E-Governance Objectives (நோக்கங்கள் ):

  • தமிழகத்தை முதலீட்டுக்கு உகந்த இடமாக மாற்றும் வகையில் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டை மேற்கொள்ளுதல்.
  • தகவல் தொழில்நுட்ப வன்பொருள், மென்பொருள் கொள்முதலுக்கான முகமையாகவும், அரசுத் துறைகளுக்கான ஆலோசகராகவும் செயல்படுதல்.
  • அரசுத் துறைகளுக்குத் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்புக்களை வழங்குதல்.
  • அரசுத் துறைகளுக்குத் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களை வழங்குதல்.

ELCOT-an e-Market  (எல்காட் ஒரு மின்னணுச் சந்தை) :

https://emrket.elcot.in  என்ற இணையதளம், இணையம் வாயிலாக (Online) அரசுத் துறைகள், நிகழ்நிலை மூலமாகப் பணம் செலுத்தி அதனைத் தொடர்ந்து கண்காணிக்கவும். பணம் செலுத்துவதிலிருந்து மீதமுள்ள பணத்தைத் திரும்பப் பெறும் வரையிலான நிகழ்வுகளை அவ்வப்போது தெரிந்து கொள்ளவும் வழிவகை செய்கிறது. விற்பனையாளர்களும் ஆணை வழங்கப்பட்டதிலிருந்து கட்டணம் பெறப்படும் வரையிலான நிகழ்வுகளை இணையம் வழியாகத் தெரிந்து கொள்ள இத்தளம் உதவியாக உள்ளது.

[sso_enhancement_lead_form_manual title=”ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-13″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/08/14100649/TAMILNADU-State-GK-PART-13.pdf”]

E-Governance Advantages (மின் ஆளுமையின் நன்மைகள்):

  • அரசு சேவைகளின் விநியோகம் மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறது.
  • வணிகம் மற்றும் தொழில்துறையுடன் மேம்பட்ட அரசாங்க தொடர்புகள்.
  • தகவலை அணுகுவதன் மூலம் குடிமக்களுக்கு அதிகாரமளித்தல்.
  • மிகவும் திறமையான அரசு நிர்வாகம்.
  • நிர்வாகத்தில் ஊழல் குறைவு.
  • நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை அதிகரித்தல்.

 

இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

 

*****************************************************

Use Coupon code: IND75 (75% offer)+Double validity offer

IBPS CLERK 2021 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON AUG 31 2021
IBPS CLERK 2021 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON AUG 31 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group