ADDA247 தமிழின் இந்த பகுதியில் நாம் TNPSC குரூப் 1, 2/2A தேர்வுகளுக்கு தேவைப்படும் முதன்மை தேர்விற்கான கட்டுரைகளும் பிற RRB,SSC தேர்வுகளுக்கான கொள்குறி வினாக்களுக்கு தேவையான விஷயங்களும் பார்ப்போம்
An overview of the social welfare schemes of the Government of Tamil Nadu (தமிழக அரசின் சமூக நலத் திட்டங்கள் பற்றிய ஒரு பார்வை):

தமிழ்நாடு அரசு பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்புத் திட்டங்களை சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் மூலமாக செயல்படுத்துவதில் ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
பெண் குழந்தைகளின் நிலையினை முன்னேற்ற, சமூகநலத் துறையின் மூலமாக, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
Services and Organizations of the Social Welfare Department (சமூக நலத்துறையின் சேவைகள் மற்றும் நிறுவனங்கள்):
- குழந்தைகள் நலம் என்பது 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான பராமரிப்பு, அரவணைப்பு, பாதுகாப்பு மற்றும் நலம் காக்க அரசு தொடர்ந்து செயல்படுத்தி வரும் சேவைகள் மற்றும் திட்டங்களை குறிப்பதாகும்.
- அனைத்து குழந்தைகளின், உரிமைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும். உறுதியான நடவடிக்கைகளை எடுக்க அரசு உறுதி கொண்டுள்ளது.
- மேலும் நலிவுற்ற சூழ்நிலையில் வளர்ந்து வரும் பெண் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் மீதும் அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
- பெண் குழந்தைகளின் நலன் காக்க இத்துறை கீழ்க்கண்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- தொட்டில் குழந்தைத் திட்டம்
- முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்
- பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம்
- சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள்
Read more: Climates of tamilnadu
Cradle Baby Plan (தொட்டில் குழந்தைத் திட்டம்):

- பெண் சிசுக்கொலை தடுப்பதை நோக்கமாகக் கொண்டு. இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழக அரசால் “தொட்டில் குழந்தை திட்டம்* 1992-ல் சேலம் மாவட்ட ட்டத்தில் துவக்கப்பட்டது.
- வறுமை, ஆண் குழந்தையை விரும்புதல், பெண் குழந்தைகளின் திருமண செலவுகள், பிற கலாச்சார நடைமுறைகள் மற்றும் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளைப் பராமரிக்க இயலாமை போன்றவை பெண் சிசுக்கொலை வழக்கத்தில் நிலவி வருவதற்கான காரணங்கள் ஆகும்.
- பெற்றோரால் நிராகரிக்கப்படும் இத்தகைய குழந்தைகள் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், குழந்தைகள் இல்லங்கள் மற்றும் காப்பகங்கள் மூலம் பெறப்பட்டு பின் தத்து கொடுக்கப்படுகின்றன.
- தொட்டில் குழந்தை திட்டம் 2001 ஆம் ஆண்டில் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
- இதனைத் தொடர்ந்து மேற்கண்ட மாவட்டங்களில் குழந்தைகளின் உடனடி தேவைகளை கவனிப்பதற்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய தொட்டில் குழந்தை வரவேற்பு மையங்கள் திறக்கப்பட்டன.
- திட்டத்தின் வெற்றிகரமான செயல்பாட்டினால் குழந்தை பாலின விகிதம் உயர்ந்ததையடுத்து, இத்திட்டம், பாலின விகிதம் குறைவாக இருந்த கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு 2011-ஆம் ஆண்டில் விரிவுபடுத்தப்பட்டது.
- தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கியது முதல் மார்ச் 2018 வரை 5.131 (ஆண்-1017,பெண் 4114) குழந்தைகள் பெறப்பட்டுள்ளனர்.
- 2018-19 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் இத்திட்டத்திற்காக ரூ.38.01 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Chief Minister’s Girl Child Protection Program (முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்):

- 1992ஆம் ஆண்டு துவக்கப்பட்ட முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு: திட்டம் பெண் குழந்தைகளின் நலனுக்கான முன்னோடி மற்றும் வழிகாட்டும் திட்டமாகும்.
- முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் நோக்கம் பெண் குழந்தை பாலின பாகுபாட்டை தடுத்து அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசால் நேரடியாக உதவி புரிவதாகும்.
Download your free content now!
Download success!

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.
Beti Bachao, Beti Padhao (பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் நோக்கம்):
பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரித்தல், அவர்களுக்கு குறைந்தபட்ச 10-ஆம் வகுப்பு வரை கல்வி பயில ஊக்குவித்தல்.
- 18 வயதுக்கு பிறகே திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தினை பெண் குழந்தைகளிடம் ஊக்குவித்தல்.
- இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தவுடன் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள பெற்றோர்களை ஊக்குவித்தல்.
- பெண் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சமூக மற்றும் பொருளாதார அதிகாரத்தினை வழங்குதல்.
- பெண் குழந்தைகளின் நிலையை மேம்படுத்த குடும்பத்தின் பங்கினை உறுதி செய்தல்.
Homes for children with special needs (சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள்):
- தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்கள், மாற்றுத் திறனாளிகளாக உள்ள குழந்தைகளை தவிர்ப்பதால் அவர்கள் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் இல்லங்களில் பராமரிக்கப்படுகின்றனர்.
- இக்குழந்தைகளை பராமரிக்க தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் கீழ்க்கண்ட நான்கு இல்லங்களுக்கு அரசு மானியம் வழங்குகிறது.
- பிரேமவாசம், காஞ்சிபுரம்
- ஸ்ரீஅருணோதயம் டிரஸ்ட், சென்னை
- குழந்தைகளுக்கான குடும்பங்கள், கோயம்புத்தூர்
- கம்யூனிட்டி ஹெல்த் எஜூகேஷன் சொசைட்டி
- தற்போது இவ்வில்லங்களில் 136 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு| வருகின்றனர். ஒரு குழந்தைக்கு நாளொன்றுக்கு ரூ.120 வீதம் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளைப் பராமரிப்பதற்காக தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
Conclusion of the Social Welfare Schemes of the Government of Tamil Nadu (தமிழக அரசின் சமூக நலத் திட்டங்கள் முடிவுரை):
இக்கட்டுரை TNPSC GROUP 2 & 2A, GROUP 4 க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. UNIT 9 இல் உள்ள தமிழக அரசின் சமூக நலத் திட்டங்கள் தெரிந்துகொள்ள இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழக அரசின் சமூக நலத் திட்டங்கள் அறிவது மிக அவசியம். இதிலிருந்து 3 அல்லது 4 வினாக்கள் கேட்கப்படும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது
Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.
Download your free content now!
Download success!
இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
*****************************************************
Use Coupon code: WIN15(15% OFFER)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group