Tamil govt jobs   »   Study Materials   »   Types of forests in Tamil Nadu

TNPSC Group 2 Study materials| Unit 9: Types of forests in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் வகைகள்

ADDA247 தமிழின் இந்த பகுதியில் நாம் TNPSC குரூப் 1, 2/2A தேர்வுகளுக்கு தேவைப்படும் முதன்மை தேர்விற்கான கட்டுரைகளும் பிற RRB,SSC தேர்வுகளுக்கான கொள்குறி வினாக்களுக்கு தேவையான விஷயங்களும் பார்ப்போம்

Types of Forests : Introduction  (காடுகளின் வகைகள் முன்னுரை):

காடுகள் (இயற்கை தாவரம்) என்பது புவியில் இயற்கையாக வளரும் தாவரங்களின் தொகுப்பாகும். நிலத்தோற்றம், மண்ணின் தன்மை, வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு ஆகியவை இயற்கை தாவரங்களின் பரவலை கட்டுப்படுத்தும் முக்கிய காரணிகளாகும். தமிழகத்தில் உள்ள காடுகள் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதை பற்றிய விவரங்களை இந்த குறிப்பில்  காணலாம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

Natural Vegetation (இயற்கைத் தாவரங்கள்):

Types of forests in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் வகைகள்_40.1
Natural Vegetation

1988 தேசிய வனக்கொள்கையின்படி, புவிப்பரப்பில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பகுதி காடுகளால் சூழப்பட்டு இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் மொத்த காடுகளின் பரப்பளவு இவற்றை விட மிக குறைவாகும். 2017 ஆம் ஆண்டு மாநில வன அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் பரப்பளவு 26.281 ச.கி.மீட்டர்களாகும். இது மொத்த பரப்பளவில் 20.21 சதவீதமாகும். இந்தியாவில் உள்ள காடுகளில் தமிழகத்தின் பங்களிப்பு 2.99 சதவீதமாகும். ஈரப்பத பசுமைமாறா காடுகளிலிருந்து புதர் காடுகள் வரை தமிழ்நாட்டின் காடுகள் வேறுபடுகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலையானது உலகின் 25 உயிரினப்பன்மை செறிந்த பகுதிகளில் ஒன்றாகவும் இந்தியாவின் தனிச்சிறப்பு வாய்ந்த உயிரினங்களைக் கொண்ட மூன்று பகுதிகளுள் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்திய வனச்சட்டத்தின் படி அமைந்த காடுகளின் வகைப்பாடு கீழ்க்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

காடுகளின் வகைகள்

பரப்பளவு (ச.கி.மீ)

ஒதுக்கப்பட்ட காடுகள்

19,459

பாதுகாக்கப்பட்ட காடுகள்

1,782

வரையறுக்கப்படாத காடுகள்

1,266

மொத்தம்

22,507

 

Forest Types (காடுகளின் வகைகள்):

தமிழகத்தில் உள்ள காடுகள் கீழ்க்கண்டவாறு ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

 

Tropical Evergreen Forest (வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள்):

Types of forests in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் வகைகள்_50.1
Tropical Evergreen Forest

இவ்வகைக்காடுகள் அதிக மழைபெறும் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை அடர்ந்த மற்றும் மரக்கிளை அடுக்குகள் கொண்டதாக காணப்படுகின்றன. திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் சரிவுகளில் இவை காணப்படுகிறது. இலவங்க மரம், மலபார், கருங்காலி மரம், பனாசமரம், ஜாவாபிளம், ஜமுன், பலா மருது, அயனி, கிராப் மிரட்டல் போன்றவை இக்காடுகளில் காணப்படும் முக்கிய மர வகைகளாகும். அரை பசுமைமாறா வகைக் காடுகளானது உப அயனமண்டலக் காலநிலை நிலவும் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படுகிறது. சேர்வராயன் மலை, கொல்லி மலை, பச்சை மலை ஆகியன இவ்வகை காடுகள் காணப்படும் முக்கிய பகுதிகள் ஆகும். இந்திய மகோகனி, தூரங்கு தேக்கு, உல்லி காசியா, பலா மற்றும் மா மரங்கள் ஆகியன இப்பகுதியில் காணப்படும் முக்கிய மரங்களாகும்.

READ MORE: Scientific facts to know

Montane Temperate Forest (மித வெப்ப மண்டல மலைக்காடுகள்):

Types of forests in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் வகைகள்_60.1
Montane Temperate Forest

இவ்வகை காடுகள் ஆனைமலை, நீலகிரி மற்றும் பழனி மலைகளில் சுமார் 1,000 மீட்டர் உயரமான பகுதிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் காணப்படுகின்றன. இவ்வகை காடுகள் சோலாஸ் (Sholas) எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வகை காடுகளில் மரங்கள் பொதுவாக குறைந்த உயரத்துடன் பசுமையாகக் காணப்படுகின்றன. பொதுவாக நீலகிரி, சாம்பா, வெள்ளைலிட்சா, ரோஸ் ஆப்பிள் போன்ற மரங்கள் இக்காடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன.

 

Tropical Deciduous Forest (வெப்பமண்டல இலையுதிர்க்காடுகள்):

Types of forests in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் வகைகள்_70.1
Tropical Deciduous Forest

இவ்வகைக் காடுகள் பசுமை மாறாக் காடுகள் மற்றும் அரை பசுமைமாறா காடுகளின் விளிம்புப்பகுதிகளில் காணப்படுகின்றன. இக்காடுகளில் உள்ள மரங்கள் கோடை பருவங்களில் தங்களது இலைகளை உதிர்த்து விடுகின்றன. இக்காடுகளில் உள்ள மரங்கள் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியன. பருத்திப் பட்டு மரம், இலவம், கடம்பா, டாகத் தேக்கு, வாகை, வெக்காளி மரம் மற்றும் சிரஸ் போன்றவை இங்கு காணப்படும் முக்கிய மர வகைகளாகும். மூங்கில்களும், இக்காடுகளில் காணப்படுகிறது. இக்காடுகளில் காணப்படும் சில மரவகைகள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

Also Read: பொது அறிவியல் விதிகள் | General Scientific laws FOR TNEB ASSESSOR, TNPSC EXAMS

 

வெற்றி வாராந்திர நடப்பு நிகழ்வுகள் August 1st Week 2021

×
×

Download your free content now!

Download success!

Types of forests in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் வகைகள்_90.1

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.

 

Mangroves Forest (சதுப்பு நில காடுகள்):

Types of forests in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் வகைகள்_100.1
Mangroves Forest

இவ்வகைக்காடுகள் கடலோரப் பகுதிகள், ஆற்றின் டெல்டா பகுதிகள், தீவுகளின் கடைப்பகுதிகள், மற்றும் ஆற்று முகத்துவாரங்களில் காணப்படுகின்றன. பொதுவாக இத்தாவரங்கள் பசுமையானதாகவும் , மிதமான உயரம் உடையதாகவும் தோல் போன்ற இலைகளுடனும் காணப்படுகின்றன. இவ்வகை தாவரங்கள் உவர் நிலங்கள் மற்றும் உவர் நீரில் வாழும் தன்மையுடையன. ஆசிய மாங்குரோவ், வெள்ளை மாங்குரோவ், காட்டுமல்லி இந்தியன் ப்ரிவெட் மரங்கள் போன்றவை இங்கு வளரும் குறிப்பிடத்தக்க மரங்களாகும். பிச்சாவரம், வேதாரண்யம், முத்துப்பேட்டை, சத்திரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் குறிப்பித்தக்க அளவில் இக்காடுகள் அமைந்துள்ளன.

 

Role of Mangroves in Coastal Zone Management (கடல் பாதுகாப்பு மேலாண்மையில், சதுப்புநிலத் தாவரங்களின் பங்கு) :

கடல் அலைகள் மற்றும் புயலால் ஏற்படும் பாதிப்பிலிருந்து கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாக்கின்றது. மேலும் பவளப்பாறைகளையும், கடலோர புல்வெளிகளையும் மணல் படிவுகளால் மூழ்கடிக்கப்படாமல் பாதுகாக்கின்றது.

 

Notes (குறிப்புகள்):

பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு அருகே அமைந்துள்ளது. இது 1,100 ஹெக்டேர் பரப்பளவுடன் (11 சதுர கிலோமீட்டர்) உலகின் இரண்டாவது மிகப் பெரிய சதுப்பு நிலக்காடாக உள்ளது. வங்க கடலிலிருந்து மணல் திட்டுகளால் இக்காடுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இது அவிசீனியா மற்றும் ரைசோபோரா போன்ற தாவர இனங்களைக் கொண்டது. மேலும் இவை பல அரிய வகை கிளிஞ்சல்கள் மற்றும் துடுப்பு மீன்கள் நிறைந்ததாகவும் உள்ளது.

 

Tropical Thorn Forest (வெப்பமண்டல முட்புதர்க்காடுகள்):

Types of forests in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் வகைகள்_110.1
Tropical Thorn Forest

தமிழ்நாட்டில் மிகக்குறைவான மழை பெரும்பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன. இக்காடுகள் சமவெளியில் இருந்து 400 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன. பனை, வேம்பு, கருவேலம், வெள்ளைக் கருவேலம், சீமை கருவேலம் ஆகியவை இவற்றில் பொதுவாக காணப்படும் மரங்களாகும். இவற்றில் புதர்செடிகளும் அதிகமாக காணப்படும். தர்மபுரி, இராமநாதபுரம், விருதுநகர் மற்றும் பிற மாவட்டங்களின் சில பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.

 

தமிழ்நாட்டில் அதிகக் காடுகளைக் (பரப்பளவு) கொண்ட மாவட்டங்கள்

மாவட்டம்

பரப்பளவு (சதுர கிலோமீட்டர்)

தர்மபுரி

3,280

கோயம்புத்தூர்

2,627

ஈரோடு

2,427

வேலூர்

1,857

நீலகிரி

1,583

திண்டுக்கல்

1,662

READ MORE: வாராந்திர நடப்பு நிகழ்வுகள் November 2nd Week 2021

Types of forests in Tamil Nadu Conclusion (தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் வகைகள் முடிவுரை):

இக்கட்டுரை TNPSC GROUP 2 & 2A, GROUP 4  க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. UNIT 9 புவியியல் மற்றும் தமிழ்நாடு  புவியியலில் உள்ள காடுகளின் வகைகளை தெரிந்துகொள்ள இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாட்டில்  உள்ள காடுகளின் வகைகளை  அறிவது மிக அவசியம். இதிலிருந்து 3 அல்லது 4 வினாக்கள் கேட்கப்படும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இக்கட்டுரை  உருவாக்கப்பட்டுள்ளது.

 

READ MORE: வெற்றி ADDA247 நடப்பு நிகழ்வுகள் 240 வினாடி வினா October PDF 2021

 

இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

Weekly Current Affairs One-Liners | 18th to 24th of October 2021 Weekly Current Affairs In Tamil 1st Week Of October 2021
Weekly Current Affairs One-Liners | 11th to 17th of October 2021 Weekly Current Affairs in Tamil 2nd Week of October 2021
Monthly Current Affairs PDF in Tamil October 2021 Tamilnadu Monthly Current Affairs PDF in Tamil October 2021 2021

 

*****************************************************

Coupon code- NOV75-75% OFFER

Types of forests in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் வகைகள்_120.1
TNPSC Group – 4 Batch Tamil Live Classes

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Download your free content now!

Congratulations!

Types of forests in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் வகைகள்_90.1

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Download your free content now!

We have already received your details!

Types of forests in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் வகைகள்_150.1

Please click download to receive Adda247's premium content on your email ID

Incorrect details? Fill the form again here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Thank You, Your details have been submitted we will get back to you.