Home   »   Job Notification   »   TNUSRB PC EXAM NEW SYLLABUS 2022

TNUSRB PC EXAM NEW SYLLABUS 2022, Students Request for Syllabus Update | தமிழ்நாடு இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம்

TNUSRB PC EXAM NEW SYLLABUS 2022: If you are a candidate preparing for TNPSC/TNUSRB Exams and actively looking for a government job, you have a great opportunity. Please don’t miss to go through the article to know more regarding the TNUSRB Constable Recruitment 2022 to be released by the Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB). You will get all the information regarding the TNUSRB PC Recruitment 2022, Exam Pattern, Vacancy, TNUSRB PC Exam New Syllabus 2022, etc. on this page.

TNUSRB PC EXAM NEW SYLLABUS 2022: TNUSRB இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆட்சேர்ப்பு 2022க்கான அறிவிப்பு, பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையை இங்கே பார்க்கலாம். TNUSRB இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளருக்கான ஆட்சேர்ப்பு 2022 க்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், விரைவில் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.tnusrbonline.org/ இல் வெளியிட உள்ளது. TNUSRB PC EXAM NEW SYLLABUS 2022 தொடர்புடைய அனைத்து தகவல்களும் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன.

Fill the Form and Get All The Latest Job Alerts

TNUSRB PC Recruitment 2022

Exam Name Common Recruitment for the posts of Gr.II Police Constable,
Gr.II Jail Warder and Fireman 2022
Conducting Body Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB)
Post Name Gr.II Police Constable,
Gr.II Jail Warder and Fireman
Vacancies 9000 (Tentative)
Exam Type State Level Exam
Exam Mode Offline
Exam Date Prelims exam: February 2022 (Tentative)
Language Tamil and English
Selection Process Prelims Exam, PET/PMT and Interview
TNUSRB official Website tnusrbonline.org

TNUSRB இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆட்சேர்ப்பு 2022 க்கான அறிவிப்பு தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தேர்வாணையத்தின் வலைத்தளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Apply Now: Tamil Nadu Electricity Board Recruitment | தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு

TNUSRB PC Recruitment 2022 Vacancy

2021 ல் நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில், 2022 ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் உள்ள 14000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு, தோராயமாக 11000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடம் வர வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More: TNPSC Upcoming Vacancies:2022-23 | TNPSC வரவிருக்கும் காலியிடங்கள்:2022-23

Compulsory Tamil Eligibility Test (TET) for TN Govt. Exams

2022 ஆம் ஆண்டில் நடத்தப்படும் அனைத்து தமிழக அரசு போட்டித் தேர்வுகளிலும், தமிழ் தகுதி தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் படி, இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் மாற்றம் வர வாய்ப்பு உள்ளது. அதன் படி, பாடத்திட்டத்தில் சிறிது மாற்றம் வரலாம். ஆனால், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் ஆனது, இதுவரை தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் எதையும் அறிவிக்கவில்லை.

TNUSRB PC EXAM NEW SYLLABUS 2022, Students Request for Syllabus Update | தமிழ்நாடு இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம்_40.1

TNUSRB PC Recruitment 2022 Exam Pattern

Paper A – General Knowledge

Name Of Subjects No. Of Questions
General  Science

History of India

Geography

Economics and Commerce

Indian Polity

Current Events

50

Paper B – Psychology

Name Of Subjects No. Of Questions
Mental Ability Test & Psychology 30

READ MORE: TNPSC Annual Planner 2022

TNUSRB PC Recruitment 2022 Syllabus

தற்போது நடைமுறையில் உள்ள இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான தேர்வுக்குறிய எழுத்து தேர்வு பாடத்திட்டம் கீழே வழங்கப்பட்டுள்ளது.

பகுதி- I பொது அறிவு (General knowledge)

தமிழ்

செய்யுள்நூல் இயற்றிய ஆசிரியர்களின் பெயர்கள் , செய்யுள் நூல் விவரங்கள், தமிழ் முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியர்களின் பெயர்கள் மற்றும் இலக்கண குறிப்புகள்.

ஆங்கிலம்
ஆங்கில கவிதை இயற்றிய ஆசிரியரின் பெயர்கள், ஆங்கில முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியரின் பெயர்கள், ஆங்கில இலக்கண குறிப்புகள்.

கணிதம்
அடிப்படைகள் (6-ஆம் வகுப்பிலிருந்து 10-ஆம் வகுப்பு வரை உள்ள கணித பாடத்தில் உள்ள எளிய கணக்குகள் கேட்கப்படும்)

பொது அறிவியல்
நம் அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளில் அறிவியல் ரீதியாக புரிந்துகொள்ளும் திறன், உணரும் திறன் உள்ள நல்ல திறன் பெற்றவர்கள் இப்பதவிக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

வினாக்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவுகளில் இருந்து கேட்கப்படும்.

  • அறிவியல் விதிகள், அறிவியல் உபகரணங்கள், கண்டுபிடிப்புகள், அறிவியல் விஞ்ஞானிகள் பெயர்கள் மற்றும் அவர்களது பங்கெடுப்புகள்,
  • மனிதனின் உடற்செயலியல், நோய்கள், அதன் விளைவுகள், நோய்களை சரி செய்யும் முறை மற்றும் அதைத் தடுக்கும் முறை, தேவையான உணவு உட்க்கொள்ளுதலின் மூலம் உடலின் சமநிலை காத்தல், மரபியல்,
  • விலங்குகள், பாலூட்டிகள் மற்றும் பறவைகள், சுற்றுப்புறம் மற்றும் சூழ்நிலையியல்,
  • சேர்மம் மற்றும் கலவைகள், அமிலம், காரம், உப்பு மற்றும் அதன் கலவைகள், நியூட்டனின் இயக்க விதிகள், பொருள்களின் பண்புகள், மின்சாரம், தேசிய அளவிலான ஆய்வுக்கூடங்கள் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட பகுதிகள் இவை அனைத்தினுடைய இயற்கைப் பண்புகள்.

இந்திய வரலாறு

  • சிந்து சமவெளி நாகரீகம், வேதகாலம் ஆரிய மற்றும் சங்ககாலம், மௌரிய வம்சம்,புத்த மற்றும் ஜைன மதம் குப்தர்கள் மற்றும் வர்த்தமானர்கள்,
  • பல்லவர்கள், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மற்றும் சுல்தான்கள், முகமதிய காலத்திய முக்கிய நாட்கள், மற்றும் நிகழ்வுகள்,
  • ஐரோப்பியர்களின் ஆதிக்கம் குறிப்பாக ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் மற்றும் அவர்களது ஆட்சி முறை, தற்போதைய நவீன இந்திய நிர்வாகம்.

புவியியல்

  • புவி, புவியின் இயக்கம், வட்டப்பாதையில் சுற்றுதல், தன்னைத்தானே சுற்றுதல் மற்றும் அதன் விளைவுகள்,
  • புவியின் அமைப்பு, இந்தியா அமைந்துள்ள இடம், பருவகால மாற்றங்கள், வானிலை, மழைப்பொழிவு, இயற்கை சீற்றங்கள் அல்லது அழிவுகள்,
  • பயிர்கள் பயிரிடும் முறை, இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்கள், மலைப்பிரதேசங்கள், தேசியபூங்காக்கள்,
  • முக்கிய துறைமுகங்கள், பயிர்கள் மற்றும் தாதுக்கள் முக்கிய தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடங்கள்,
  • காடு மற்றும் காடு சார்ந்த வாழ்க்கைகள், மக்கள் தொகைபரவல் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள்.

இந்திய தேசிய இயக்கம்

  • இந்திய தேசிய விடுதலை இயக்கம் மற்றும் விடுதலை அடைதல், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாலகங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, தாதாபாய் நௌரோஜி, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் பலர் பங்களிப்புகள்,
  • இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு, மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரம், சுப்பிரமணிய சிவா, இராஜாஜி மற்றும், மற்றவர்களின் பங்களிப்புகள்.

நடப்பு நிகழ்வுகள்

சமீபத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிகள், இந்திய அரசியல் அமைப்பின் வளர்ச்சிகள், புதிய தொழில் வளர்ச்சி, போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு, வரலாற்று நிகழ்வுகள், இந்திய நுண்கலைகள், நடனம், நாடகம், திரைப்படம், ஓவியம், முக்கிய இலக்கியம் சம்பந்தப்பட்ட வேலைகள், விளையாட்டுகள், தேசிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் விருதுகள், ஆங்கில சுருக்கப்பட்ட எழுத்துக்களின் விரிவாக்கம், புத்தகம் மற்றும் அதன் எழுத்தாளர்கள், பிரபலங்களின் புனைப்பெயர்கள், பொது தொழில்நுட்பம், இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும், இன்றைய தினத்தைய இந்திய மற்றும் அதன் தொடர்புடைய விவரங்கள், கலை, இலக்கியம், இந்தியப்பண்பாடு மற்றும் தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்.

பகுதி-II உளவியல் (Psychology)

அறிவாற்றலால் புரிந்து கொள்ளும் திறன்
இப்பகுதியில் உள்ள வினாக்கள் போட்டியாளர்கள் வினாக்களை புரிந்துகொண்டு அவரவர் புத்திக்கூர்மையைப் பயன்படுத்தி அதன் காரணமாக உண்மைகளைக் கண்டுபிடித்து பதிலளிக்கும் முறையில் இருக்கும்.

மேலும் இப்பகுதியில் பள்ளியில் உள்ள அடிப்படை மற்றும் எளிமையான கணித வினாக்களைக் கொண்டதாகவும் இருக்கும்.

Download TNPSC Group 2 and 2A Revised Syllabus 2022

Download TNPSC Group 4 & VAO New Syllabus 2022

Students Request for Syllabus Update

பல லட்சம் மாணவர்கள் காவலர் தேர்வுக்கு தயாராகிக்கொண்டு இருப்பதால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போன்று முன்கூட்டியே, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையமும், புதிய பாடத்திட்டம் மற்றும் தமிழ் தகுதி தேர்வு பற்றி அறிவிப்பு வெளியிடுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

இது போன்ற தேர்வு குறித்த பயனுள்ள குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

 

*****************************************************

Use Coupon code: ME15 (15% off + double validity on megapack & test pack)

TNUSRB PC EXAM NEW SYLLABUS 2022, Students Request for Syllabus Update | தமிழ்நாடு இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம்_50.1
Tamil Nadu Police Constable Test Series | Online Mock Tests for Tamil Nadu Police 2022 by Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Congratulations!

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF மே 2022

Download your free content now!

We have already received your details.

Please click download to receive Adda247's premium content on your email ID

Incorrect details? Fill the form again here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF மே 2022

Thank You, Your details have been submitted we will get back to you.