வணக்கம் நண்பர்களே நான் முன்பு கூறியதை போல் தேர்வுக்கு தயாராகும் முன் அதன் பாடத்திட்டம் மற்றும் தேர்வு திட்டத்தை அறிவது முக்கியம் . நாம் இன்று தமிழக அரசால் நடத்தப்படும் சீருடை பணியாளர் தேர்வுகளில் ஒன்றான TNUSRB கான்ஸ்டபிள் பதிவிக்கான பாடத்திட்டம் குறித்து பாப்போம். . இது எழுத்து தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு என இரண்டு நிலையாக நடைபெறும்
TNUSRB கான்ஸ்டபிள் பதவி கான பாடத்திட்டம்: பத்தாம் வகுப்பு தரம்
- தமிழ் : செய்யுள் இயற்றிய ஆசிரியர்களின் பெயர்கள்,செய்யுள்நூல் விவரங்கள், தமிழ் முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியர்களின் பெயர்கள் மற்றும் இலக்கண குறிப்புகள்
- ஆங்கிலம் : ஆங்கில கவிதை இயற்றிய ஆசிரியரின் பெயர்கள், ஆங்கில முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியர்கள் பெயர்கள், ஆங்கில இலக்கண குறிப்புகள்
- கணிதம் : சிறிய கணக்குகள்
- பொது அறிவியல் : நம் அன்றாட வாழ்வில் நிகழ்வுகளில் அறிவியல் ரீதியாக புரிந்துகொள்ளும் திறன், உணரும் திறன் உள்ள நல்ல கல்வி திறன் பெற்றவர்கள் இப்பதவிக்கு எதிர்பார்க்கப்படுகிறார்கள். வினாக்கள் இயற்பியல் , வேதியல்,உயிரியல் பாடங்களில் இருந்து கேட்கப்படும். அறிவியல் விதிகள் , அறிவியல் உபகரணங்கள் , கண்டுபிடிப்புகள், அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் அவர்களது பங்கெடுப்புகள் , மனிதனின் உடற்செயலியல் , நோய்கள் அதன் விளைவுகள், நோய்களை சரி செய்யும் முறை, அதை தடுக்கும் முறை, தேவையான உணவு உட்கொள்ளுதல் மூலம் உடலின் சமநிலைகாத்தல், மரபியல், விலங்குகள், பாலூட்டிகள் மற்றும் பறவைகள், சுற்றுப்புறம், மற்றும் சூழ்நிலையியல், சேர்மம் மற்றும் கலவைகள், அமிலம்,காரம், உப்பு மற்றும் கலவைகள் , இயக்கம், நியூட்டனின் இயக்க விதிகள், பொருட்களின் பண்புகள், மின்சாரம், தேசிய அளவிலான ஆய்வுக்கூடங்கள் மற்றும் அதன் சம்மந்தப்பட்ட பகுதிகள் இவை அனைத்தின் இயற்கை பண்புகள் .
- இந்திய வரலாறு : சிந்து சமவெளி நாகரிகம், வேதகாலம் ஆரிய மற்றும் சங்க காலம், மற்றும் மௌரிய வம்சம், புத்த மற்றும் ஜைன மதம் குப்தர்கள் மற்றும் வர்த்தமானர்கள், பல்லவர்கள்,சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மற்றும் சுல்தான்கள் மற்றும் முகமதியர்கள் காலத்திய முக்கிய நாட்கள் மற்றும் நிகழ்வுகள். ஐரோப்பியர்களின் ஆதிக்கம் குறிப்பாக ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் மற்றும் அவர்களது ஆட்சி முறை தற்போதைய நவீன இந்திய நிர்வாகம்.
- புவியியல்: புவி, புவியில் இயக்கம், வட்டப்பாதையில் சுற்றுதல் தன்னைத்தானே சுற்றுதல், மற்றும் அதன் விளைவுகள், புவியின் அமைப்பு, இந்திய அமைந்துள்ள இடம், காலநிலை, பருவகால மாற்றங்கள் மற்றும் வானிலை, மற்றும் மழைப்பொழிவு, இயற்கை சீரற்றங்கள் மற்றும் அழிவுகள், பயிர்கள் பயிரிடும் முறை, இந்தியாவின் முக்கிய இடங்கள் மற்றும் முக்கிய நகரங்கள், மலைபிரதேசங்கள், தேசிய பூங்காக்கள், முக்கிய துறைமுகங்கள், பயிர்கள் மற்றும் தாதுக்கள், முக்கிய தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடங்கள், காடு மற்றும் காடு சார்ந்த வாழ்க்கைகள், மக்கள் தொகை பரவல் மற்றும் அதன் சம்மந்தப்பட்ட நிகழ்வுகள்
- இந்திய தேசிய இயக்கம் : இந்திய தேசிய விடுதலை இயக்கம் மற்றும் விடுதலை அடைதல், விடுதலை போரட்டத்தில் பாலா கங்காதர திலக்,கோபால கிருஷ்ணா கோகலே, தாதாபாய் நௌரோஜி,மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு மற்றும் பலர். இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ் நாட்டின் பங்களிப்பு, மஹாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார், சுப்ரமணிய சிவா,ராஜாஜி மற்றும் மற்றவர்களின் பங்களிப்பு
- நடப்பு நிகழ்வுகள்: சமீபத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ச்சிகள், இந்திய அரசியல் அமைப்பின் வளர்ச்சிகள், புதிய தொழில் வளர்ச்சி, போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு, வரலாற்று நிகழ்வுகள், இந்திய நுண்கலைகள், நடனம், நாடகம், திரைப்படம், ஓவியம் , முக்கிய இலக்கியம் சம்மந்தப்பட்ட வேலைகள்,விளையாட்டுக்கள், தேசிய பன்னாட்டு விருதுகள் , தேசிய பன்னாட்டு நிறுவனங்கள், ஆங்கில சுருக்கப்பட்ட எழுத்துக்களின் விரிவாக்கம், புத்தகம் மற்றும் அதன் ஆசிரியர்கள், பிரபலங்களின் புனைபெயர்கள், புதிய தொழில்நுட்பம், இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும், இன்றைய தினத்தைய இந்தியா மற்றும் அதன் தொடர்புடைய விவரங்கள், கலை, இலக்கியம், இந்திய பண்பாடு மற்றும் தமிழ் நாடு நடப்பு நிகழ்வுகள்
- உளவியல் : இப்பகுதியில் உள்ள வினாக்கள், தேர்வர்கள் வினாக்களை புரிந்து கொண்டு அவரவர் புத்திக்கூர்மையை பயன்படுத்தி அதன் காரணமாக உண்மைகளை கண்டுபிடித்து பதிலளிக்கும் வண்ணம் இருக்கும். மேலும் இப்பகுதியில் பள்ளியில் உள்ள அடிப்படை மற்றும் எளிமையான கணித வினாக்களை கொண்டதாகவும் இருக்கும்.
தேர்விற்கான உங்கள் பயிற்சியின் முதல் அடியை எடுத்து வையுங்கள்
இது போன்ற தேர்வுகள் குறித்த விவரங்களுக்கு ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Download the app now, Click here
Use Coupon code: PREP75(75% OFFER) + இரட்டை செல்லுபடியாகும் சலுகை
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247 tamil website | Adda247 Tamil telegram group |Adda247TamilYoutube|Adda247App