Tamil govt jobs   »   TNPSC Group 2 OTR/OTP Aadhaar Issues   »   TNPSC Group 2 OTR/OTP Aadhaar Issues

TNPSC Group 2 Online Application OTR/OTP Aadhaar Issues | TNPSC குரூப் 2 ஆன்லைன் விண்ணப்ப OTR/OTP ஆதார் சிக்கல்கள்

TNPSC Group 2 OTR/OTP Aadhaar Issues: The announcement for the TNPSC Group 2 exam has been issued by TNPSC and the application process is about to complete. You will get all the information regarding the Last Date to Apply for TNPSC Group 2 Exams 2022, TNPSC OTR Aadhaar link 2022, How To Link Aadhaar With TNPSC One Time Registration and TNPSC Group 2 OTR/OTP Aadhaar Issues on this page.

Organization Tamilnadu Public Service Commission
Last date to link 30 April 2022
Official website www.tnpsc.gov.in
Exam mode Offline
OTR page https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ==
Job type State Government Job

Fill the Form and Get All The Latest Job Alerts

TNPSC Group 2 OTR/OTP Aadhaar Issues | TNPSC குரூப் 2 OTR/OTP ஆதார் சிக்கல்கள்

TNPSC Group 2 OTR/OTP Aadhaar Issues: குரூப் 2 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது ஆணையத்தால் வெளியிடப்பட்டு அதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையும் தொடங்கி நிறைவடைய உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் One Time Registration கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை அதனுடன் இணைத்திருக்க வேண்டும் என அறிவித்தது. இந்த நிலையில், ஆதார் எண்ணை இணைப்பதற்கான OTP வருவதில் பல சிக்கல்களை மாணவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக பல சமூக ஊடகங்களிலும் தாங்கள் இதன் காரணமாக விண்ணப்பிக்க முடியாததையும் கவலையுடன் தெரிவித்து வருகின்றனர்.

TNPSC One Time Registration 2022 (OTR) Aadhaar link Last Date New Update

Last Date to Apply for TNPSC Group 2 Exams 2022 | TNPSC குரூப் 2 தேர்வு 2022க்கு விண்ணப்பிக்க கடைசி தேதி

‘குரூப் – 2 மற்றும் 2 ஏ பணிகளில் அடங்கிய 5,529 பணிகளுக்கான போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம், நாளை மறுநாள் முடிவதால், தேர்வர்கள் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழக அரசு துறைகளில், குரூப் – 2 பதவிகளில் 116 இடங்களையும், குரூப் – 2 ஏ பதவிகளில் 5,413 இடங்களையும் நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், மே 21ல் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, பிப்., 23ல் துவங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள்.

Download the TNPSC Group 2 Notification 2022

20 Lakh Students Applied for TNPSC Group 2 Exams 2022 | TNPSC குரூப் 2 தேர்வுகள் 2022க்கு 20 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்

பட்டப்படிப்பு முடித்த அனைவரும், குரூப் – 2, 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வில், 20 லட்சம் பேர் வரை பங்கேற்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.  இதுவரை விண்ணப்பிக்காத தேர்வர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல், விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

TNPSC OTR Aadhaar link 2022 | TNPSC OTR ஆதார் இணைப்பு 2022

TNPSC OTR Aadhaar link 2022: ஒருங்கிணைந்த தொகுதி II மற்றும் IIA தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் ஒருமுறை நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைத்து அதன்பின் ஒருங்கிணைந்த தொகுதி II மற்றும் IIA தேர்விற்கு விண்ணப்பிக்குமாறு தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Tamil Eligibility Test for TN Exams

How To Link Aadhaar With TNPSC One Time Registration? TNPSC ஒரு முறை பதிவுடன் ஆதாரை இணைப்பது எப்படி?

  1. TNPSC யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  2. திரையின் வலது பக்கத்தில் Apply Online லிங்கை கிளிக் செய்து கீழ்தோன்றும் மெனுவிலிருந்து “நிரந்தரப்பதிவு விவரங்கள் ” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. Click நிரந்தரப்பதிவு விவரங்கள்
  4. உங்கள் Login ID மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்
  5. edit button ஐ தேர்வுசெய்து தனிப்பட்ட விவரங்களைத் தேர்ந்தெடுக்கவும்
  6. உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்யவும்.

READ MORE: How to crack TNPSC group 2 in first attempt

Will TNPSC Extend the Application Date for TNPSC Group 2 Exams? TNPSC குரூப் 2 தேர்வுகளுக்கான விண்ணப்ப தேதியை TNPSC நீட்டிக்குமா?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் One Time Registration கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை அதனுடன் இணைத்திருக்க வேண்டும் என அறிவித்த நிலையில், ஆதார் எண்ணை இணைப்பதற்கான OTP வருவதில் பல சிக்கல்களை மாணவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். ஆதார் என்னை OTR உடன் இணைப்பதற்கான OTP வராததால் பல மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் கவலை கொண்டுள்ளனர். இதன் காரணமாக பலரும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை தள்ளிவைக்குமாறு ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TNPSC Group 2 Online Application OTR/OTP Aadhaar Issues_40.1

TNPSC Group 2 Application Form Correction | TNPSC குரூப் 2 விண்ணப்பப் படிவ திருத்தம்

TNPSC Group 2 Application Form Correction: தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ TNPSC ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு II மற்றும் II A அறிவிக்கையை 23.02.2022 அன்று வெளியிட்டது. அத்தேர்விற்கு, இணையவழியில்‌ விண்ணப்பிக்க கடைசி நாள்‌ 23.03.2022 ஆகும்‌. அத்தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்களில்‌, பலர்‌ சில தகவல்களை தவறாக உள்ளீடு செய்துவிட்டதாகவும்‌, அவற்றை திருத்தம்‌ செய்ய அனுமதிக்கக்கோரியும்‌ தேர்வாணையத்தை தொலைபேசி மற்றும்‌ மின்னஞ்சல்‌ மூலமாக தொடர்புகொண்டு வருகின்றனர்‌. தேர்வாணையம்‌ விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பத்தில் தவறுகளை திருத்துவதற்கான வாய்ப்பளித்துள்ளது. 23.02.2022 தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் திருத்திக்கொள்ளலாம் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.