வணக்கம் நண்பர்களே..
நாம் இது வரை TNPSC குரூப் 2/2A பரிட்சை குறித்த பாட திட்டம், தேர்வு முறை, கட் ஆப் குறித்து பார்த்தோம். இன்று நாம் நமது கட்டுரையில் குரூப் 2/2A தேர்வின் கடந்து இரண்டு ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்கள் குறித்து பார்ப்போம் .
TNPSC (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) ஆண்டுக்கு ஒரு முறை குரூப் 2/2A குடிமைப்பணி தேர்வை நடத்துகிறது. இதில் சார் பதிவாளர், நகராட்சி ஆணையர், துணை வணிக வரி அதிகாரி, பிற பதவிகளில் பொதுவாக சம்பந்தப்பட்ட துறைகளில் ஆய்வாளர் போன்ற நேர்காணல் பதவிகளுக்கும், பல்வேறு துறைகளில் அலுவலக உதவியாளர் போன்ற குரூப் 2A பதவிகளுக்கும் நடத்தப்படும் தேர்வாகும் . சென்ற ஆண்டு வரை தனி தனியாக நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மே மாதம் தேர்வின் அறிவிப்பு வரவிருந்தது. கூடிய விரைவில் அது வெளியாகும்.
அறிவிப்பு வந்த பிறகு தான் ஒரே தேர்வா அல்லது முன்னர் போன்ற தனி தனி தேர்வா என்பது தெரியும்.
முந்தைய ஆண்டுகளின் காலியிடங்கள்:
குரூப் 2 தேர்வு 2018 ஆண்டும் குரூப் 2A தேர்வு 2017 ஆண்டும் கடைசியாக நடத்தப்பட்டது. இரண்டும் 2014 வரை ஒரே தேர்வாக நடந்தது , பின்பு இரண்டு தேர்வாக பிரிக்கப்பட்டது. அதே போல் தனி தேர்வாக நடந்த குரூப் 4 மற்றும் விஏஓ ஒரே தேர்வாக அந்த ஆண்டு முதல் நடை பெற்றது. இப்போது 2021 ஆண்டு முதல் குரூப் 2 மற்றும் 2A ஒரே தேர்வாக நடத்தப்படும் என TNPSC கூறியுள்ளது.
2017 குரூப் 2A காலியிடங்கள்:
மொத்தம் பல்வேறு அலுவலக உதவியாளர் பணியிடங்கள் 1953 க்கு அறிவிப்பு வந்தது.
2016 குரூப் 2A காலியிடங்கள்:
மொத்தம் பல்வேறு அலுவலக உதவியாளர் பணியிடங்கள் 1947 க்கு அறிவிப்பு வந்தது.
2018-2019 குரூப் 2 காலியிடங்கள்:
சார் பதிவாளர், நகராட்சி ஆணையாளர், துணை வணிக வரியை அலுவலர் போன்ற பதவிகளுக்கு மொத்த பணியிடங்கள் 1199 க்கு அறிவிப்பு வந்தது.
2015-2017 குரூப் 2 காலியிடங்கள்:
சார் பதிவாளர், துணை வணிக வரியை அலுவலர் போன்ற பதவிகளுக்கு மொத்த பணியிடங்கள் 1241 க்கு அறிவிப்பு வந்தது. இதில் நகராட்சி ஆணையாளர்பதவி இடம் பெற வில்லை. அது மொத்தமே 125 பதவிகள் என்பதால் எப்போதோ தான் இடம் பெரும். இது மட்டும் முடிவு அறிவிக்க சற்று காலம் எடுத்துக்கொள்ளப்பட்ட TNPSC இன் தேர்வு.
வரும் அறிவிப்பின் காலிப்பணியிட எதிர்பார்ப்பு:
தோராயமாக இந்த ஆண்டு நீண்ட இடைவேளைக்கு பின் தேர்வு நடப்பதால் காலிப்பணியிடங்கள் 2000 + 1500 = 3500 இல் இருந்து 3700 வரை எதிர்பார்க்கலாம்.
விரைவில் தேர்வு வரவிருக்கிறது உங்கள் படிப்பை துரிதப்படுத்துங்கள்.
மேலும் இது போன்ற தேர்வு செய்திகளுக்கு எங்களுடன் ADDA247 தமிழ் செயலியில் இணைந்திருங்கள்.
Download the app now, Click here
Use Coupon code: JUNE77(77% OFFER)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247 tamil website | Adda247 Tamil telegram group | Adda247TamilYoutube | Adda247App