TNPSC குரூப் 2/2A தேர்வு என்பது TNPSC (தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையத்தால்) ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்படும் தேர்வாகும். இது சார் பதிவாளர், மாநகராட்சி ஆணையர், துணை வணிக வரி அதிகாரி, போன்ற உயர் பதவிகளுக்கு நடத்தப்படும். நேர்காணல் இல்லாத இளநிலை உதவியாளர் பணியிடங்களும் இந்த தேர்வில் நிரப்பப்படும். இது மாநில அளவில் இரண்டாம் உயர் நிலை பதவிகளுக்கான தேர்வு. மேலும் இந்த ஆண்டிலிருந்து நேர்முக தேர்வு உடைய பதவிகள் நேர்முக தேர்வு இல்லா பதவிகள் என இரண்டிற்கும் ஒரே தேர்வு நடத்தப்படும்.
தேர்வு முறை:
தேர்வின் பெயர் | நேரம் | மதிப்பெண் | கேள்விகள் | குறைந்தபட்ச மதிப்பெண் |
முதல் நிலை | 3 மணிநேரம் | 300 | 200 | 90 |
முதன்மை | 3 மணிநேரம் | 300 | 8 | பகுதி 1-25
பகுதி2- ஏதுமில்லை |
நேர்காணல் | 10-30 நிமிடம் | 40 | 10 to 20 | ———- |
முதல் நிலை தேர்வு:
- பொது அறிவு 175 மதிப்பெண், திறனறிவு மனக்கணக்கு நுண்ணறிவு 25 மதிப்பெண் (பத்தாம் வகுப்பு தரம்)
- கொள்குறி வினாக்கள்
- சரியான பதிலுக்கு தலா ஒன்றிற்கு 1.5 மதிப்பெண், தவறான பதிலுக்கு எந்த மதிப்பெண்ணும் இல்லை.
- மொத்தம் 300 மதிப்பெண்
- நேரம் 3 மணிநேரம்
- குறைத்த பட்ச தேர்ச்சி மதிப்பெண்-90
முதன்மை தேர்வு:
முதல் நிலை தேர்வில் 1:10 விகிதத்தில் தேர்ச்சி பெற்றோர் முதன்மை தேர்விற்கு அழைக்கப்படுவர்.
- நேரம் 3 மணிநேரம்
- தரம் பட்டப்படிப்பு தரம்
- விரிவான எழுத்து தேர்வு
- இது பகுதி 1 மற்றும் பகுதி 2 என இரண்டு பகுதியாக மொத்தம் 300 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும்
- பகுதி 1 ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்தல் மற்றும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்தல் குறித்த கேள்விகள் என்ற தலைப்பில் தலா 2 கேள்விகள் (மொத்தம் 4 கேள்வி) கொண்டு இருக்கும்.
- பகுதி 1 மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும் அதில் 25 மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி பெற்றதாக கருதி பகுதி 2 மதிப்பீடு செய்யப்படும்
- பகுதி 2 மொத்தம் 200 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும்
1. சுருக்கி வரைதல் -2 கேள்விகள் (2*20=40மதிப்பெண்)
2. பொருள் உணர்த்திறன்- 2 கேள்விகள் (2*20=40மதிப்பெண்) 3. திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல்- 2 கேள்விகள் (2*20=40 மதிப்பெண்) 4. கடிதம் வரைதல்( அலுவல் சார்ந்த)- 2 கேள்விகள் (2*20=40 மதிப்பெண்) 5. சுருக்க குறிப்பில் இருந்து விரிவாக்கம் செய்தல்-2 கேள்விகள் (2*20=40 மதிப்பெண்) |
- இந்த பகுதியில் குறைத்த பட்ச தகுதி மதிப்பெண் இல்லை.
- இந்த பகுதியை மொத்தமாக தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுத வேண்டும் இரண்டும் கலந்து எழுத கூடாது.
நேர்காணல்:
- 1:3 அல்லது 1:2 என்ற விகிதத்தில் நேர்காணல் பதவிகளுக்கு நேர்காணலுக்கு அழைப்படுவர்.
- மதிப்பெண்-40
- மொத்தம் -340 மதிப்பெண்ணிற்கு எடுக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர்.
- நேர்காணல் இல்லா பதவிகளுக்கு முதண்மை தேர்வில் தேர்ச்சி பெற்றால் கலந்தாய்வு நடைபெறும்.
************************************************************
Coupon code- KRI01– 77% OFFER
**TAMILNADU state exam online coaching And test series
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials
**WHOLE TAMILNADU LIVE CLASS LINK
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit