திருக்குறள் (161-170) அழுக்காறாமை | Tirukkural (161-170) Not Envying | TNPSC Group 2 and 2a
Posted bybsudharshana Published On September 7th, 2021
Table of Contents
திருக்குறள், சுருக்கமாகக் குறள், ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும். திருக்குறள், சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுட்களைக் கொண்டது. TIRUKKURAL முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
Tirukkural 161-170 (குறள் 161-170)
திருக்குறள் பகுதியில், நாம் இன்று காணவிருக்கும் அதிகாரம் “அழுக்காறாமை
தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈ.டுபடமாட்டார்கள்.
Couplet 164
The wise through envy break not virtue’s laws,
Knowing ill-deeds of foul disgrace the cause.
Explanation:
(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds.
குறள் 165
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.
பொருள்:
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.
Couplet 165
Envy they have within! Enough to seat their fate!
Though foemen fail, envy can ruin consummate.
Explanation:
To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction.
குறள் 166
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
பொருள்:
உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்.
Couplet 166
Who scans good gifts to others given with envious eye,
His kin, with none to clothe or feed them, surely die.
Explanation:
He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment.
செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.
Couplet 167
From envious man good fortune’s goddess turns away,
Grudging him good, and points him out misfortune’s prey.
Explanation:
Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister.
குறள் 168
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
பொருள்:
பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்.
Couplet 168
Envy, embodied ill, incomparable bane,
Good fortune slays, and soul consigns to fiery pain.
Explanation:
Envy will destroy (a man’s) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come).