சூரிய மண்டலம் | The Solar System for TNPSC |_00.1
Tamil govt jobs   »   Study Materials   »   Solar System in Tamil

சூரிய மண்டலம் | The Solar System for TNPSC

சூரிய மண்டலம் என்பது சூரியனுக்கும் அதைச் சுற்றி வரும் பொருட்ளுக்கும் இடையே உள்ள ஈர்ப்புவிசைப் பிணைப்பால் உருவான ஒரு அமைப்பாகும். சூரிய மண்டலம், சூரியனை சுற்றி வரும் எட்டுக் கோள்களையும், ஐந்து குறுங்கோள்களையும் உள்ளடக்கியது. இந்த அமைப்பில் சூரியனை நேரடியாகச் சுற்றி வரும் பெரிய அளவிலான கோள்களும், சிறிய அளவிலான குறுங்கோள்களும், சிறு கதிரவ அமைப்புப் பொருட்கள் போன்றவையும், சூரியனை மறைமுகமாகச் சுற்றி வரும் துணைக்கோள்களும் அடங்கும். Solar System பற்றி விரிவாக இக்கட்டுரையில் பார்க்கலாம்.

 

TNPSC GROUP 4 FREE TEST BY ADDA247 REGISTER NOW!!

The Solar System : Overview (கண்ணோட்டம்)

சூரிய மண்டலம் | The Solar System for TNPSC |_50.1
The Solar System

சூரியன் மற்றும் அதைச் சுற்றி வரும் வான் பொருட்கள் சேர்ந்ததே சூரிய மண்டலமாகும். அதில் கோள்கள், வால் விண்மீன்கள், சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள் உள்ளிட்ட பல பொருட்கள் அடங்கும். சூரியனுக்கும் அந்த பொருட்களுக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசையினால் அவை சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரிய மண்டலமானது பால்வெளி மையத்திலிருந்து சுமார் 27000 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. (ஒளி, ஒரு ஆண்டில் கடக்கும் தூரமே ஒளியாண்டு தூரம் எனப்படுகிறது.)

 

The Solar System : Exploration (ஆய்வுப் பயணம்)

 • நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் என்பவர் சூரிய அமைப்பில், சூரியன்தான் மையப்பகுதியில் அமைந்துள்ளது என்பதை கணித பூர்வமாக அறிவித்தார்.
 • 17ஆம் நூற்றாண்டில் கலீலியோ கலிலி, சூரியனில் கதிரவப் புள்ளிகள் இருப்பதையும், வியாழனை நான்கு நிலவுகள் சுற்றி வருவதையும் கண்டறிந்தார்.
 • 1705 ஆம் ஆண்டில், எட்மண்டு ஏலி என்பவர், ஒரு வால்வெள்ளி 74-75 வருடங்களுக்கு ஒருமுறை ஒரே பொருளையே மீண்டும் வந்தடைவதை உணர்ந்தார். இதுவே கோள்களைத் தவிர மற்ற பொருட்களும் கதிரவ அமைப்பில் உள்ளது என்பதற்கான முதல் சான்றாக விளங்கியது.

 

READ MORE: Indus Valley Civilisation (Harappa)

The Solar System : சூரியன் (The Sun)

சூரிய மண்டலம் | The Solar System for TNPSC |_60.1
The Solar System : The Sun
 • சூரியன், சூரிய மண்டலத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இதன் நிறை சூரிய அமைப்பின் மொத்த நிறையில், 99.86 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது.
 • இது ஒரு நடுத்தர அளவுடைய விண்மீன், அதிக வெப்பமுள்ள, சுழன்று கொண்டிருக்கக் கூடிய ஒளிரும் வாயுக்களின் சூடான பந்து ஆகும். அதன் முக்கால் பகுதி ஹைடிரஜன் வாயுவாலும், கால் பகுதி ஹீலியம் வாயுவாலும் நிரம்பியுள்ளது.
 • அதிக அழுத்தம் காரணமாக சூரியனில் உள்ள ஹைடிரஜன் அணுக்கள் இணைந்து, ஹீலியம் அணுக்களாக மாறுகின்றன. அணுக்கரு இணைவு என அழைக்கப்படும் இந்த நிகழ்வினால், பெருமளவு ஆற்றலானது ஒளி மற்றும் வெப்ப வடிவில் வெளியாகிறது.
 • அதன் வலிமையான ஈர்ப்புப் புலத்தினால், மிகப்பெரிய கோள்கள் முதல் சிறுகோள்கள், வால் விண்மீன்கள், விண்கற்கள் மற்றும் பிற சிதைவுற்ற பொருள்கள் வரை அனைத்தையும், அதன் சுற்றுப்பாதையில் வைத்திருக்கிறது.

 

The Solar System : கோள்கள் (Planets) 

சூரிய மண்டலம் | The Solar System for TNPSC |_70.1
The Solar System : Planets
 • ஒரு கோளானது சூரியனை சுற்றி வர வேண்டும்.
 • அதற்கென்று தனி சுற்று வட்டப்பாதை இருக்கு வேண்டும்.
 • வேறு எந்தப் பொருளும் இடர்படாத வகையில், அதன் சுற்றுப்பாதை இருக்க வேண்டும்.
 • அதற்கு தேவையான ஈர்ப்பு விசையை உருவாக்க, அது அதிக நிறையை பெற்றிருக்க வேண்டும்.

புதன் (Mercury)

 • புதன் சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோளும், சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களில் மிகச்சிறியதும், அதிவிரைவானதும் ஆகும்.
 • இது சூரியனிலிருந்து 0.4 வானியல் அலகு தொலைவில் உள்ளது. சூரியனில் இருந்து புதனுக்குச் செல்ல, சூரிய ஒளிக்கு 3.2 நிமிடங்கள் ஆகும்.
 • இதற்கு வளிமண்டலமோ, இயற்கைத் துணைக்கோள்களோ கிடையாது. இது புவியமைப்பு அம்சங்களுக்காகப் பெயர் பெற்றதாகும். இது சந்திரனை ஒத்த கிண்ணக்குழிப் பரப்பைப் பெற்றுள்ளது.
 • இதன் மையப்பகுதியில், இரும்பு உலோகம் அதிகமாக உள்ளது. இது அதிகபட்ச அன்றாட வெப்பநிலை வேறுபாடு மற்றும் மிகக் குறுகிய ஆண்டையும் கொண்டுள்ளது.
 • சூரியனுக்கு மிக அருகில் இருந்தாலும், புதன் இரண்டாவது வெப்பமான கிரகம் ஆகும். புதன் சூரியனை சுற்றி வர எடுக்கும் காலம் 87.97 நாட்கள்.

வெள்ளி (Venus)

 • வெள்ளி கிரகம், புவியின் இரட்டை எனவும் அழைக்கப்படுகிறது. அதற்குக் காரணம், இது அளவில் புவியை ஒத்திருக்கும் ஒரு கோளாகவும், புவி போன்ற இதன் அடர்த்தி மற்றும் திண்மம் ஆகிய பண்புகளே ஆகும். இது புவியை விட வறண்டும் ஒன்பது மடங்குகள் அடர்த்தியான வளிமண்டலத்தையும் கொண்டுள்ளது.
 • இது சூரியனிலிருந்து 0.7 வானியல் அலகு தொலைவில் உள்ளது. சூரியனில் இருந்து வெள்ளிக்குச் செல்ல, சூரிய ஒளிக்கு 6 நிமிடங்கள் ஆகும்.
 • இதற்கு இயற்கை துணைக்கோள்கள் கிடையாது. மற்ற கிரகங்களைப் போலன்றி இது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சுழல்கிறது. இது மிகக் குறைந்தபட்ச சுழற்சி வேகத்தைக் கொண்ட கோளாகும்.
 • இது மிக உயர்ந்தபட்ச வெப்பநிலையைக் கொண்ட கோளாகும். இதன் மேற்பரப்பு வெப்பநிலை 400 °செல்சியசை எளிதில் அடைந்துவிடக்கூடியது. இதற்கு அதன் வளிமண்டலத்தில் பைங்குடில் வளிமங்கள் அதிகமாக இருப்பதே காரணமாகும்.
 • வெள்ளி சூரியனை சுற்றி வர ஆகும் காலம் 224.7 நாட்கள்.

புவி (Earth)

சூரிய மண்டலம் | The Solar System for TNPSC |_80.1
The Solar System – Earth
 • புவி உட்கோள்களில் மிகப்பெரியதும் மிக அடர்த்தியான நீலக்கோள் ஆகும். நீலக்கோள் என அழைக்கப்படுவதற்குக் காரணம், புவியொத்த கோள்களில், இது ஒன்றில்தான் தண்ணீரின் இருத்தல் தன்மை உள்ளது.
 • சூரியனிடமிருந்து இது மூன்றாவது கோளாகவும், அளவில் ஐந்தாவது கோளாகவும் உள்ளது. சூரிய ஒளி பூமியை அடைய 8.3 நிமிடங்கள் ஆகும்.
 • அண்டத்தில் புவி ஒன்றில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. புவியின் வளிமண்டலம், உயிரினங்கள் வாழத் தேவையான 21 சதவீதம் ஆக்சிசனைக் கொண்டிருப்பதால், மற்ற கோள்களின் வளிமண்டலங்களைக் காட்டிலும் வேறுபாடாக உள்ளது.
 • பூமியில் சந்திரன் என்ற ஒரேயொரு இயற்கை துணைக்கோள் உண்டு.
 • பூமி சூரியனை சுற்றி வர ஆகும் காலம் 365.26 நாட்கள்.

 

READ MORE: Anglo-Maratha Wars

செவ்வாய் (Mars)

 • செவ்வாய் கிரகம், புவி மற்றும வெள்ளி ஆகிய இரண்டைக் காட்டிலும் சிறிய கோளாக உள்ளது.
 • அதன் வளிமண்டலத்தில் கரியமில வாயுவே அதிகம் உள்ளது. அதில் பரந்து காணக்கிடக்கும் ‘ஒலம்பஸ் மான்ஸ்’ போன்ற எரிமலைகள் மற்றும் ‘வாலிஸ் மேரினாரிஸ்’ போன்ற பிளந்த பள்ளத்தாக்குகளும் காணப்படுகின்றன. அவைகள் அதன் புவியியல் நடவடிக்கைகளை எடுத்துக்காட்டுகின்றன.
 • அதன் சிகப்புநிறம் அதில் உள்ள இரும்பு ஆக்ஸைடுகளால் ஏற்பட்டதாகும்.
 • செவ்வாய்க் கோளுக்கு இரண்டு சிறிய இயற்கைத் துணைக்கோள்கள் உள்ளன. அவைகள் ‘டைமோஸ்’ மற்றும் ‘போபோஸ்’ என்றழைக்கப் பெறுகின்றன.
 • செவ்வாய் சூரியனை சுற்றி வர ஆகும் காலம் 686.93 நாட்கள்.

(வியாழன்)Jupiter

 • வியாழன் நமது சூரிய மண்டலக் கோளமைப்பில் மிகப்பெருங்கோளாகும். இது 318 மடங்கு புவியின் நிறையைக் கொண்டுள்ள கோளாகும். அது 2.5 மடங்குகள் பிற கோள்களின் மொத்த பெரும்பான்மையைக் காட்டிலும் அதிகமானதாகும்.
 • இது மிக மிக அதிகபட்ச வேகத்திலமைந்த சுழற்சியைக் கொண்டிருப்பதால் 10 மணி நேரத்திற்குச் சற்றே குறைவான நேரத்திற்குள் ஒரு சுற்றை முடித்து விடுகிறது.
 • வியாழன் அறுபத்து மூன்று அறியப்பட்ட நிலவுகளைக் கொண்டுள்ளது. இதில் மிகப்பெரிய நிலவுகளான கனிமீடு, கலிஸ்டோ, அயோ, மற்றும் ஐரோப்பா ஆகிய நான்கும் புவியொத்த கோள்களை ஒத்துள்ளன. சூரிய மண்டலக் கோளமைப்பில் உள்ள அனைத்துத் துணைக் கோள்களிலும் கானிமீட் துணைக்கோள்தான் மிகப்பெரும் அளவுடையது மற்றும் மிக அதிக எடைமிக்கதுமான ஒன்றாக உள்ளது. இது சூரிய அமைப்பில் உள்ள புதன் கோளை விட அளவில் பெரியதாகும்.
 • வியாழன் சூரியனை சுற்றி வர ஆகும் காலம் 11.86 வருடம்.

 

Read More: Indus Valley Civilisation (Harappa) For TNPSC

சனி(Saturn)

சூரிய மண்டலம் | The Solar System for TNPSC |_90.1
The Solar System – Saturn
 • சனி தனது வளையத்தால் அறியப்படும் கோளாகும். இவ்வளையங்கள் பனித்துகள்களாலும் பிரிமோர்டியல் தூசுகளாலும் உருவானவை.
 • வியாழனினை ஒத்த அம்சங்கள் அதன் வளிக்கோளம் மற்றும் காந்தக்கோளத்தில் உள்ளன. வியாழனின் கொள்ளளவில் 60 சதவீதத்தை சனி கொண்டுள்ளது. ஆனால் நிறையைப் பொறுத்த அளவில் மூன்றாவதாக உள்ளது. சூரிய அமைப்பில் உள்ள கோள்களில் சனி மட்டுமே, நீரை விட அடர்த்தி குறைந்த கோள் ஆகும்.
 • இதற்கு 60 அறியப்பட்ட துணைக்கோள்கள் உள்ளன. அவற்றில் ‘டைட்டான்’ மற்றும் ‘என்சடலாடஸ்’ ஆகிய நிலவுகளில் புவியியல் தொடர்பான செயல்பாடுகள் நடப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன.
 • சனி சூரியனை சுற்றி வர ஆகும் காலம் 29.42 வருடம்.

யுரேனஸ்(Uranus)

 • யுரேனஸ் மற்றும் நெப்டியூன், ஜோவியன் இரட்டைகள் என்று அழைக்கப்படுகின்றன.
 • யுரேனசு 14 புவிப்பொருண்மைகள் கொண்ட வெளிப்புறக் கிரகங்களுள் மிக மென்மையானதாகும். யுரேனஸ் உருளும் கோள் எனவும் அழைக்கப்படுகிறது.
 • தனிச்சிறப்பான அம்சமாக அமைவது, எல்லாக் கோள்களைக் காட்டிலும் சூரியனை அது அதன் வட்டப்பாதையில் அதன் பக்கமாகவே சுற்றிவலம் வருவதேயாகும். ஞாயிறு செல்லும் மார்க்கத்தில் தொண்ணூறு டிகிரி ஊடு அச்சில் சாய்வுநிலை- அதாவது ஒருக்கணித்துக் கொண்டு செல்வதேயாகும்.
 • யுரேனசு அண்ட வெளியில் மிகக்குறைந்த வெப்பத்தையே கதிர்வீச்சாக வெளியிடுகிறது. யுரேனசு 27 அறியப்பட்டத் துணைக்கோள்களைக் கொண்டுள்ளது.
 • யுரேனஸ் சூரியனை சுற்றி வர ஆகும் காலம் 83.75 வருடம்.

நெப்டியூன்(Neptune)

 • யுரேனசைக் காட்டிலும் சிறிதாக இருந்தாலும், நெப்டியூன் புவியை விட பதினேழு மடங்கு நிறையைக் கொண்டுள்ளதால், அதிக அடர்த்தியுடன் உள்ளது.
 • இதன் உள்வெப்பக் கதிர்வீச்சு வியாழன் மற்றும் சனியை விட அதிகமாக உள்ளது.
 • நெப்டியூன் பதினான்கு அறியப்பட்ட துணைக்கோள்களைக் கொண்டுள்ளது. அதில் பெரியதான ‘டிரைட்டன்’ புவியியல் செயல்பாட்டுடன் உள்ளது. டிரைட்டன் மட்டும் தான் வட்டப்பாதையில் பின்னோக்கிச்செல்லும் ஒரேயொரு நிலவாகும்.
 • புளுட்டோ, இதன் சுற்றுப்பாதையில் 248 ஆண்டுகளுக்கொருமுறை குறுக்கே கடந்துச் செல்லும்.
 • நெப்டியூன் பூமியை சுற்றி வர ஆகும் காலம் 163.72 வருடம்.

The Solar System : சிறுகோள்கள் (Asteroids)

சூரிய மண்டலம் | The Solar System for TNPSC |_100.1
The Solar System : Asteroids
 • செவ்வாயின் சுற்றுப்பாதைக்கும் வியாழனின் சுற்றுப்பாதைக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது. இந்த இடைவெளியில், கோள்கள் தோன்றிய போது உருவான லட்சக்கணக்கான பாறைத்துண்டுகள் சுற்றி வருகின்றன. இவையே சிறுகோள்கள் எனப்படுகின்றன.
 • அத்தகைய கோள்களிலேயே செரஸ் என்பதே மிகப்பெரிய சிறுகோளாகும். இதன் விட்டம் 946 கி.மீ ஆகும்.
 • சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கொரு முறை பூமியின் மீது சிறுகோள் வீழ்வதுண்டு; அது 10 கி.மீ. அகலம் கொண்டதாக இருக்கும்.

The Solar System : வால் விண்மீன்கள் (Comets)

சூரிய மண்டலம் | The Solar System for TNPSC |_110.1
The Solar System : Comets
 • அதி நீள்வட்டப் பாதையில், சூரியனைச் சுற்றிவரும் தூசு மற்றும் பனி நிறைந்த பொருள்களே வால்விண்மீன்கள் எனப்படும். இவற்றின் சுற்றுக்காலம் அதிகம் ஆகும். இவைசூரியனை நெருங்கும் போது, ஆவியாகி, தலை மற்றும் வால் ஆகியவை உருவாகின்றன.
 • ஒருசில பெரிய வால் விண்மீன்களுக்கு 160 மில்லியன் (16 கோடி) கிலோமீட்டர் நீளமுள்ள வால் உள்ளது. இது புவிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவை விட அதிகமாகும்.
 • பல வால்விண்மீன்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் தோன்றுபவை ஆகும். அதில் ஒன்றுதான் ஹாலி வால்விண்மீன். இது 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் தெரியும். கடைசியாக 1986-ல் இது பார்க்கப்பட்டது. எனவே, இது மீண்டும் 2062-ல் தெரியும்.

 

READ MORE: Anglo-Mysore Wars

The Solar System : விண்கற்கள் மற்றும் விண் வீழ்கற்கள் (Meteors and Meteorites)

சூரிய மண்டலம் | The Solar System for TNPSC |_120.1
The Solar System : Meteors and Meteorites
 • சூரியமண்டலம் முழுவதும் பரவலாக சிதறிக்கிடக்கும் சிறு பாறைத்துண்டுகளே விண்கற்கள் எனப்படுகின்றன.
 • மிக அதிக வேகத்துடன் பயணிக்கும் இவை புவியின் வளிமண்டலத்தை நெருங்கும் போது, அதன் ஈர்ப்பு விசையால் கவரப்படுகின்றன. வரும் வழியில், வளிமண்டல உராய்வினால் உருவாகும் வெப்பத்தின் காரணமாக இவை பெரும்பாலும் எரிந்துவிடுகின்றன. அவை விண்கற்கள் எனப்படும்.
 • ஒரு சில பெரிய அளவிலான விண்கற்கள், முழுவதுமாக எரியாமல் கற்களாக பூமியில் மீண்டும் வீழ்வதுண்டு. அவை விண் வீழ்கற்கள் எனப்படுகின்றன.

 

The Solar System : துணைக்கோள்கள் (Satellites)

சூரிய மண்டலம் | The Solar System for TNPSC |_130.1

 • ஒரு சுற்றுப்பாதையில் சூரிய மண்டலத்திலுள்ள கோள்களைச் சுற்றி வரும் பொருள் துணைக்கோள் என்றழைக்கப்படுகிறது. ஈர்ப்பு விசையின் காரணமாக, இவை கோள்களைச் சுற்றி வருகின்றன.
 • மனிதனால் உருவாக்கப்பட்ட துணைக்கோளிலிருந்து வேறுபடுத்துவதற்காக, இயற்கையான துணைக்கோள்களை, நிலவுகள் என்று அழைக்கிறோம்.
 • புவியின் இயற்கைத் துணைக்கோளான நிலவின் (சந்திரன்) மீது படும் ஒளியானது எதிரொளிக்கப்படுவதால், அதை நம்மால் பார்க்க முடிகிறது.
 • சூரியமண்டலத்திலுள்ள கோள்களுள் புதன் மற்றும் வெள்ளி கோள்களைத் தவிர மற்ற அனைத்திற்கும் நிலவுகள் உள்ளன.

 

The Solar System : Conclusion (முடிவுரை)

சூரிய மண்டலம் மற்றும் அதன் உறுப்புகள் பற்றி மிக தெளிவாக கண்டறிந்தோம். தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில், இக்கட்டுரை  உருவாக்கப்பட்டுள்ளது, இக்கட்டுரை TNPSC GROUP 2 & 2A, GROUP 1  க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

 

*****************************************************

Use Coupon code: WIN75(75% off)+DOUBLE VALIDITY OFFER

சூரிய மண்டலம் | The Solar System for TNPSC |_140.1
TNPSC GROUP 4 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON SEP 13 2021

JOIN NOW: TNPSC GROUP -4 | LIVE BATCH | TAMIL LIVE CLASSES BY ADDA247

 

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

வெற்றி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் செப்டம்பர் 2021

×

Download success!

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.

Thank You, Your details have been submitted we will get back to you.

Was this page helpful?

Join India's largest learning destination

What You Will get ?

 • Job Alerts
 • Daily Quizzes
 • Subject-Wise Quizzes
 • Current Affairs
 • Previous year question papers
 • Doubt Solving session

Login

OR

Forgot Password?

Join India's largest learning destination

What You Will get ?

 • Job Alerts
 • Daily Quizzes
 • Subject-Wise Quizzes
 • Current Affairs
 • Previous year question papers
 • Doubt Solving session

Sign Up

OR
Join India's largest learning destination

What You Will get ?

 • Job Alerts
 • Daily Quizzes
 • Subject-Wise Quizzes
 • Current Affairs
 • Previous year question papers
 • Doubt Solving session

Forgot Password

Enter the email address associated with your account, and we'll email you an OTP to verify it's you.


Join India's largest learning destination

What You Will get ?

 • Job Alerts
 • Daily Quizzes
 • Subject-Wise Quizzes
 • Current Affairs
 • Previous year question papers
 • Doubt Solving session

Enter OTP

Please enter the OTP sent to
/6


Did not recive OTP?

Resend in 60s

Join India's largest learning destination

What You Will get ?

 • Job Alerts
 • Daily Quizzes
 • Subject-Wise Quizzes
 • Current Affairs
 • Previous year question papers
 • Doubt Solving session

Change PasswordJoin India's largest learning destination

What You Will get ?

 • Job Alerts
 • Daily Quizzes
 • Subject-Wise Quizzes
 • Current Affairs
 • Previous year question papers
 • Doubt Solving session

Almost there

Please enter your phone no. to proceed
+91

Join India's largest learning destination

What You Will get ?

 • Job Alerts
 • Daily Quizzes
 • Subject-Wise Quizzes
 • Current Affairs
 • Previous year question papers
 • Doubt Solving session

Enter OTP

Please enter the OTP sent to Edit Number


Did not recive OTP?

Resend 60

By skipping this step you will not recieve any free content avalaible on adda247, also you will miss onto notification and job alerts

Are you sure you want to skip this step?

By skipping this step you will not recieve any free content avalaible on adda247, also you will miss onto notification and job alerts

Are you sure you want to skip this step?