Tamil govt jobs   »   SSC MTS Recruitment 2020-2021 : SSC...

SSC MTS Recruitment 2020-2021 : SSC MTS ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020-2021

SSC MTS Recruitment  : SSC MTS ஆட்சேர்ப்பு அறிவிப்பு

SSC MTS Recruitment 2020-2021 : SSC MTS ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020-2021_2.1

தொற்றுநோய் காரணமாக SSC MTS தேர்வு அட்டவணையை தாமதப்படுத்தியது மற்றும் இறுதியாக SSC MTS 2020-21 தேர்வுக்கான அறிவிப்பை வெளியீட்டுள்ளது.  SSC மூலம் ஒரு வேலையை வாய்ப்புக்காக காத்திருக்கும் அனைத்து ஆர்வலர்களுக்கும் இது ஒரு நல்ல செய்தி. SSC நாட்காட்டியின் படி பணியாளர்கள் தேர்வு ஆணையம் இறுதியாக மத்திய அரசின் பல்வேறு துறைகளில் MTS (Multi Tasking Staff) பதவிக்கான தேதிகளை வெளியிட்டுள்ளது. இந்த கட்டுரையில், SSC MTS 2020 தொடர்பான அனைத்து விவரங்களையும் விவாதிக்க உள்ளோம்.

SSC MTS ஆட்சேர்ப்பு

SSC MTS தேர்வு பொது மத்திய சேவைக் குழுவில் ‘C’ Non-Gazetted, Non-Ministerial பதவிகளில் இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அலுவலகங்களில், பல்வேறு மாநிலங்களில் / யூனியன் பிரதேசங்களில் ஆட்களை நியமிக்க நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ஆட்களை SSC MTS தேர்வுக்கு வருகிறார்கள்.

SSC MTS அறிவிப்பு:

செயல்திறன் தேதி
SSC MTS அறிவிப்பு வெளியீட்டு தேதி 5th February 2021
SSC MTS ஆன்லைன் பதிவு செயல்முறை 5th February 2021
ஆன்லைன் விண்ணப்பித்திற்கான  கடைசி தேதி: 21st March 2021
ஆன்லைன் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 23rd March 2021
ஆஃப்லைன் சல்லானின் பெறுவதற்கான  கடைசி தேதி: 25th March 2021
சல்லான்  மூலம் பணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 29th March 2021
நுழைவு சீட்டு  வெளியிடும் தேதி Jun-2021
SSC MTS தேர்வு தேதிகள் (PAPER I) 1st July to 20th July 2021
SSC MTS PAPER I முடிவு Nov-2021
SSC MTS தேர்வு தேதிகள் (PAPER II) 21st November 2021

 

SSC MTS 2020 காலியிடங்கள்:

SSC MTS 2020 க்கு, காலியிடங்கள் குறித்த விவரங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படும்.

SSC MTS 2020 கல்வி தகுதி:

  1. விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிருந்து, மெட்ரிகுலேஷன் (10 வது தேர்ச்சி) அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. விண்ணப்பப் படிவம் பெறப்பட்ட இறுதி தேதிக்கு முன்னர் ஒரு விண்ணப்பதாரர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் அவர் அல்லது அவள் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவதில்லை.

SSC MTS 2020 வயது வரம்பு:

  • ஒரு விண்ணப்பதாரர்  குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் மற்றும் 01.01.2021 வரை 25 வயதைத் தாண்டக்கூடாது. (அதாவது விண்ணப்பதாரர்  02-01-1996 க்கு முன் பிறந்தவர்கள் அல்ல, 01-01-2003 க்கு பிற்பாடு அல்ல)
  • முன்பே குறிப்பிடப்பட்ட வயதுத் தேவை தவிர ஒதுக்கப்பட்ட  பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படுகிறது.
வகை வயது தளர்வு
SC/ ST 5 years
OBC 3 years
PwD (Unreserved) 10 years
PwD (OBC) 13 years
PwD (SC/ ST) 15 years
Ex-Servicemen (ESM) ஆன்லைன் விண்ணப்பம் பெறப்பட்ட இறுதி தேதியில் உண்மையான வயதிலிருந்து வழங்கப்பட்ட இராணுவ சேவையை கழித்த ௦3 ஆண்டுகளுக்குப் பிறகு.

 

SSC MTS தேர்வு முறை:

SSC MTS தேர்வு முறை இரண்டு தேர்வுகளை கொண்டிருக்கும், அதைத் தொடர்ந்து ஆவண சரிபார்ப்பு. சமீபத்திய அறிவிப்பின்படி, இரண்டு தேர்வுகள் இருக்கும் தேர்வுத் தாள்-1 மற்றும் தேர்வுத் தாள்-1

SSC MTS தேர்வு தேதிகள் (PAPER I)

SSC MTS தேர்வுத் தாள்-1 01.07.2021 முதல் 20.07.2021 வரை (தற்காலிக) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி மொத்தம் 100 பல தேர்வு கேள்விகளைக் கொண்டிருக்கும். முன்னதாக, இது 150 மதிப்பெண்களைக் கொண்டுள்ளது, ஆனால் இப்போது மொத்த மதிப்பெண்களின் எண்ணிக்கை 100 ஆக மாற்றப்பட்டுள்ளது.

பாடங்கள்  கேள்விகளின் எண்ணிக்கை மதிப்பெண்கள் மொத்த காலம் / நேரம்
General Intelligence & Reasoning 25 25 90 mins
Numerical Aptitude 25 25
General English 25 25
General Awareness 25 25
Total 100 100

 

SSC MTS தேர்வு தேதிகள் (PAPER II)

பாடங்கள்  மதிப்பெண்கள் மொத்த காலம் / நேரம்
குறுகிய கட்டுரை / ஆங்கிலத்தில் கடிதம் அல்லது அரசியலமைப்பின் 8 வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள எந்த மொழியும் 50 30 Min

 

SSC MTS 2020-21க்கான விண்ணப்பக் கட்டணம்:

  1. SSC MTS 2020-21க்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 /-.
    2. எஸ்சி / எஸ்டி / பிடபிள்யூடி / முன்னாள் படைவீரர்கள் / பெண்கள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது:

  1. விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் SSC SSC MTS 2020 க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். https://ssc.nic.in
  2. பதிவு என்பதைக் கிளிக் செய்து உங்கள் விவரங்களை நிரப்பவும்.
  3. நீங்கள் ஒரு பதிவு எண் மற்றும் கடவுச்சொல் பெறுவீர்கள்.
  4. பதிவு எண். மற்றும் கடவுச்சொல் கொண்டு உங்கள் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதியை உள்ளிடவும்.
  5. உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தை தேவையான JPG  & JPEG பரிமாணங்களில் பதிவேற்றவும்.
  6. இறுதியாக விண்ணப்பக் கட்டணம் பொருந்தினால் செலுத்தவும்.

SSC MTS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020-2021 pdf

அடிக்கடி சந்தேகிக்கும் கேள்விகள்:

Q1. SSC MTS 2020-21 அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்?

ANS. SSC MTS 2020 அறிவிப்பு  பிப்ரவரி 5 அன்று வெளியிடப்பட்டது.

 

Q2. SSC MTS தேர்வு 2020 க்கு நான் எப்போது விண்ணப்பிக்க முடியும்?

ANS. SSC MTS தேர்வு 2020 க்கு 2021 மார்ச் 21 வரை விண்ணப்பிக்கலாம்.

 

Q3. SSC MTS  தேர்வு 2020 எப்போது நடத்தப்படும்?

ANS. SSC MTS தேர்வு 2020 இரண்டு கட்டங்களாக நடைபெறும். Paper I  2021 ஜூலை 01 முதல் 20 வரை நடைபெறும்

Q4. ஓபிசி வகைக்கு SSC MTS ல் ஏதேனும் வயது தளர்வு உள்ளதா?

ANS. ஆம், ஓபிசிக்கு அதிக வயது வரம்பைத் தாண்டி வயது-தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

 

Q5. SSC MTS ஆட்சேர்ப்பு 2020 க்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி என்ன?

 

ANS. SSC MTS கான குறைந்தபட்ச கல்வித் தகுதி மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றது அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து சமமானதாகும்.

coupon code- KRI01– 77% 

PRIME TEST PACK SERIES 

SSC MTS Recruitment 2020-2021 : SSC MTS ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020-2021_3.1

PRIME குறியீட்டைப் பயன்படுத்தி, வெல்ல முடியாத விலையில் பிரைமை பதிவுசெய்க.

 

LIVE CLASS TNPSC GROUP 4

Starts FROM 22MARCH 2021

 

https://www.adda247.com/product-onlineliveclasses/7902/tnpsc-group-4-complete-online-course-tamil-live-classes-by-adda247