ரம்ஜான் எனப்படும் ஈகைத் திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் உலகெங்கிலும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு உன்னத பெருநாள் விழா. ரமலான் இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் ரம்ஜான், ரமலான் எனவும் அழைக்கப்படுகிறது. இம்மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பை அனுசரிக்கிறார்கள். இஸ்லாமிய நம்பிக்கையின்படி முகம்மது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக இந்த நோன்பை அனுசரிக்கிறார்கள். ஆண்டுக்கொரு முறை அனுசரிக்கப்படும் இந்த நோன்பு இஸ்லாத்தின் ஐந்து தூாண்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இஸ்லாம் என்பது வெறும் மார்க்கமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறையே, அவர்களின் உறுதியான நம்பிக்கை. ரமலான் நோன்பின் நிறைவாக இஸ்லாமிய நாடுகளில் கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் ஷவ்வால் முதல்பிறை தினத்தன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தொடங்கி மே 12ஆம் தேதியோடு ரமலான் நோன்பு நிறைவடைகிறது.
இந்த நன்னாளில் இரக்கம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும். அனைவரும் ஆரோக்கியமாகவும் செல்வச் செழிப்புடனும் வாழ இனிய ரமலான் வாழ்த்த்துக்கள்!
Coupon code- SMILE- 72% OFFER
**TAMILNADU state exam online coaching and test series
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials
**WHOLE TAMILNADU LIVE CLASS LINK
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit