Table of Contents
Rajya Sabha Elections: If you are a candidate preparing for TNPSC Exams and looking for TNPSC Study Materials, you will get all the information regarding the topic Rajya Sabha, The Upper House of the Indian Parliament, Eligibility to become a member of the State Legislature, How does the Rajya Sabha Elections take Place, etc. on this page.
Rajya Sabha Elections: இந்தியாவில் மாநிலங்களவை (Council of States) அல்லது ராஜ்ய சபா (Rajya Sabha) என்பது இந்திய நாடாளுமன்றத்தில் அதிகபட்சம் 250 உறுப்பினர்களைக் கொண்ட மேலவை ஆகும். தற்போது ராச்சிய சபையில் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 12 உறுப்பினர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார். இந்த 12 பேரைத் தவிர்த்து மற்றவர்கள் இந்திய மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களால் விகிதாச்சார பிரதிநித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். Rajya Sabha Elections தொடர்பான அனைத்து விவரங்களும், இந்த கட்டுரையில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
Fill the Form and Get All The Latest Job Alerts
Rajya Sabha Overview
மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மேலவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும். மாநிலங்களவைத் தலைவராக குடியரசுத் துணைத்தலைவர் பதவி வகிப்பார்.
மாநிலங்களவை கூட்டங்கள் மக்களவை கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறும். அவை கலைப்பிற்கு இது பொருந்தாது. இதன் அதிகாரங்கள் மக்களவைக்கு ஈடானதாகவும் மக்களவையை விட அதிகாரம் குறைந்ததாவும் கருதப்படுகின்றது. இரு அவைகளினாலும் எதிரொலிக்கும் சர்ச்சைகளுக்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்ட அமர்வின் மூலம் தீர்வு காணப்படுகின்றது. இவ்வாறு நடைபெறும் கூட்டுக் கூட்டங்களில் மக்களவை மாநிலங்களைவையை விட இரு மடங்கு உறுப்பினர்களை கொண்டதாக இருப்பினும், மாநிலங்களவை உண்மையான நடப்பிலுள்ள (defacto) வீட்டோ அதிகாரங்களை கொண்டதாக கூட்டுக் கூட்டங்களில் கருதப்படுகின்றது.
மாநிலங்களவையின் தற்போதைய அலுவல் நிலை (ex-officio) கூட்டத் தலைவராக இந்திய துணை குடியரசுத் தலைவராக வெங்கய்யா நாயுடு பொறுப்பேற்றுள்ளார். துணைக் கூட்டத் தலைவர் அவ்வப்பொழுது நடைபெறும் கூட்டங்களின் தன்மைக்கேற்ப தற்காலிமாக கூட்டத்தலைவர் இல்லாத பொழுது பொறுப்பேற்கின்றனர்.
மாநிலங்களவையின் முதல் கூட்டம் மே 13, 1952 அன்று துவக்கப்பட்டது.
Read More: List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்
The Upper House of the Indian Parliament
மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா இந்திய நாடாளுமன்றத்தின் 250 உறுப்பினர்கள் கொண்ட மேலவை ஆகும். இவர்களில் 12 பேர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் கலை, இலக்கியம், அறிவியல் போன்ற அவரவர்களுக்குரிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பர். இந்த 12 பேரைத் தவிர்த்து மற்றவர் மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவர். இதன் கட்டமைவு இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 81 இல் கூறப்பட்டுள்ளதின்படி அமைக்கப்பட்டுள்ளது.
Eligibility to become a member of the State Legislature
ஒருவர் மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் அவசியம். 30 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராகவும், நல்ல மனநிலையுடன், கடனாளியாக இல்லாதிருத்தல் அவசியமாகும். குற்றமற்றவர் அல்லது குற்றமுறு செயலில் ஈடுபடாதவர் என்பதை தன் ஒப்புதல் வாக்குமூலத்தில் உறுதி அளிக்க வேண்டும்.
Read More: List of Indian Space Centres & Indian Space Agencies
State-wise Members
உறுப்பினர்கள் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் ஒவ்வொரு மாநிலத்திலுருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்முறை கனேடிய செனட் மற்றும் ஜெர்மனி பந்தர்ஸ்ரேட் ஆகிய மன்றங்களின் தேர்ந்தெடுக்கும் முறைகளின்படி இங்கும் பின்பற்றபடுகின்றது. இதன் இருக்கைகள் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கேற்றார்போல் அதன் மக்கள் தொகை, பரப்பளவு இவற்றின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரிய மாநிலங்களுக்கு அதிக இடங்களும் சிறிய மாநிலங்களுக்கு குறைவான இருக்கைகளும் சரிசம பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. 2006 இன்படி இதன் இருக்கைகள் கீழ்கண்டவாறு ஒதுக்கப்பட்டுள்ளது.
Read More: List of Hydro Power Projects in India
How does the Rajya Sabha Elections take Place?
மாநிலங்களவையின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுக்களுக்கு ஒரு முறை நிறைவடையும். அவ்வாறு நிறைவடையும் எம்பிக்களின் பதவிகளுக்கு அவ்வப்போது தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும். இந்த தேர்தல் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அடிப்படையில் நடைபெறும். அதன்படி ஒரு வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்றால் குறிப்பிட்ட அளவு வாக்குகளை பெறவேண்டும். இந்தக் குறிப்பிட்ட அளவு வாக்குகள், அதற்கென்று அரசியல் அமைப்பு சட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள அளவீடு மூலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
வாக்குகள் = ((மொத்தமாக உள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை) x 100/ (காலியிடங்கள்+1))+1 என்ற அளவீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
தமிழகத்தில் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற நிலையில், 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனில், ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க தேவையான வாக்குகள்,
வெற்றிபெற தேவையான வாக்குகள் = ((234×100 )/(6+1))+1 = 3343.85
ஒரு எம்.எல்.ஏயின் வாக்கு 100 வாக்குகளாக கணக்கிடப்படுகிறது. இந்நிலையில், ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் அவசியமாகிறது. தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் போது எம்.எல்.ஏக்களின் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதற்கான வாய்ப்புக்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மரணமடைந்தால் அதற்கான வாய்ப்புக்கள் உருவாகும். தற்போது தமிழகத்தில் அதிமுகவுக்கு 123 எம்.எல்.ஏக்களும், திமுகவுக்கு 100, காங்கிரஸுக்கு 7 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். இதன்படி 18 தேதி நடைபெற இருக்கின்ற மாநிலங்களவை தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தலா மூன்று இடங்களில் வெற்றிபெற வாய்ப்புள்ளது.
Read More: Indian Parliament for TNPSC
Rajya Sabha Elections Conclusion
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது, இக்கட்டுரை TNPSC GROUP 4, GROUP 2 & 2A, GROUP 1 க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 2 அல்லது 3 கேள்விகள் கேட்கப்படும்.
வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
*****************************************************
Coupon code- PREP15-15% OFFER

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group